இந்த நிலையில் தற்பொழுது முதல் ஆளாக, கடந்த 2009ம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக கூறி குடும்ப நல நீதிமன்றத்திற்கு மனுவோடு சென்று இருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி என்ற தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் 10ம் தேதி இந்த வழக்கு விசாரணையானது நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்த்தி நீதிமன்றம் செல்லும் முன்பே இந்த விஷயத்தில் ஜெயம் ரவி நீதிமன்றம் சென்றுள்ளது புதிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தியின் குடும்பத்தார் தரப்பில் இருந்து, தொடர்ந்து ஜெயம் ரவியின் திரைவாழ்க்கையில் தலையீடுகள் தொடர்ந்து இருந்ததாகவும், அவர் ஒப்புக்கொள்ளும் படங்கள் மற்றும் அது சார்ந்த விஷயங்களில், அவர் தன்னுடைய இஷ்டத்திற்கு செயல்பட முடியாமல் இருந்ததாகவும் சில தகவல்கள் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மூலம் இப்படி திரைத்துறை சம்மந்தமான தலையீடுகள் இருந்த நிலையில் தான், இப்பொது ஜெயம் ரவி தனது விவகாரத்தை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயம் குறித்த உண்மை தன்மை இன்னும் தெரியவில்லை.