கங்கனாவின் மும்பை வீடு
விரைவில் திரையில் வெளிவரவிருக்கும் தனது 'எமர்ஜென்சி' படத்திற்காக காத்திருக்கும் கங்கனா, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பரில் சுமார் 20.7 கோடிக்கு மும்பை நகரில் உள்ள பாலி ஹில் என்ற பகுதியில் ஒரு சொகுசு பங்களாவை வாங்கினார். அதன் பின்னர் 2022ன் ஆண்டு டிசம்பரில் வாக்கில், அந்த வீட்டை வைத்து வங்கியில் சுமார் 27 கோடி ரூபாய் கடன் வாங்கினார் என்றும் கூறப்படுகிறது. மேலும் நடிகை கங்கனா ரணாவத் அந்த வீட்டை தனது அலுவலகமாகப் பயன்படுத்தினார், அதுமட்டுமல்லாமல் அவரது தயாரிப்பு நிறுவனமான மணிகர்னிகா பிலிம்ஸ் நிறுவனத்தையும் அங்கேயே நிர்மாணித்து வந்தார்.
கடந்த 2020ல், அதாவது கங்கனா அந்த வீட்டை வாங்கிய 3 ஆண்டுகள் கழித்து, பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி), அந்த ஆண்டு செப்டம்பரில், கங்கனாவின் பாந்த்ரா அலுவலகத்தின் சில பகுதிகளை பிஎம்சி, சட்டவிரோத கட்டுமானத்தைக் காரணம் காட்டி இடித்தது. செப்டம்பர் 9 அன்று பம்பாய் உயர்நீதிமன்றம் அதற்கு தடை உத்தரவு பிறப்பித்ததையடுத்து, அந்த இடிப்பு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பின்னர் நடிகை கங்கனா, BMCக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து சுமார் 2 கோடி ரூபாய் இழப்பீடு கோரினார், பிறகு மே 2023ல் அவர் தனது கோரிக்கைகளை வாபஸ் பெற்றார். இந்நிலையில் இப்பொது அந்த வீட்டை அவர் பெரும் தொகைக்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.