6 வருட தவம்... குழந்தையை மார்போடு அணைத்தபடி தீபிகா படுகோன்! வைரலாகும் போட்டோ!

Published : Sep 10, 2024, 03:39 PM IST

பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு செப்டம்பர் 8-ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது தீபிகா படுகோன் தன்னுடைய குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  

PREV
14
6 வருட தவம்... குழந்தையை மார்போடு அணைத்தபடி தீபிகா படுகோன்! வைரலாகும் போட்டோ!
Deepika Padukone:

பெங்களூரைச் சேர்ந்த நடிகை தீபிகா படுகோன், கன்னட திரைப்படமான ஐஸ்வர்யா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் ஷாருக்கான் நடித்த 'ஓம் சாந்தி ஓம்' திரைப்படத்தின் மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டு, பாலிவுட் திரையுலகில் நுழைந்தார். இந்த படத்தின் வெற்றி தீபிகா படுகோனை முன்னணி நடிகையாக மாற்றியது. இதைத் தொடர்ந்து சல்மான் கான், அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், போன்ற டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
 

24
Deepika And Ranveer Love

'லவ் ஆஜ் கல்' என்கிற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக ரன்வீர் சிங்குடன் நெருக்கமாக நடித்த தீபிகா படுகோன், அந்த சமயத்தில் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. பின்னர் இந்த காதல் பிரேக் கப்பில் முடிய, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஜோடி, நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் சஞ்சை லீலா பன்சாலி இயக்கத்தில் இணைந்து நடித்த ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி, போன்ற படங்கள் இவருக்கு இடையே காதல் மலர காரணமாக அமைந்தது. 'பத்மாவத்' படத்தில் நடிக்கும் போது இருவருமே தங்களின் காதலை ஓப்பனாக வெளிப்படுத்தினர்.

முதல் படமே ஹிட்... 'ஜெயம்' முதல் 'சைரன்' வரை! ஜெயம் ரவி நடித்த வெற்றிப்படங்கள் இத்தனையா?
 

34
Deepika Announce Pregnancy:

இதைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஜோடி இத்தாலியில் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இத்தாலியில் நடந்த இவர்களுடைய திருமணத்தில் குறிப்பிட்ட சில பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவருமே தங்களுடைய திரைப்பட பணியில் பிஸியாக இருந்தனர். குறிப்பாக திருமணத்தை முன்பை விட திருமணத்திற்கு பின்னர், தீபிகா படுகோன்... ஷாருக்கானுடன் நடித்த பதான், ஹ்ரித்திக் ரோஷனுடன் நடித்த பைட்டர் போன்ற படங்களில் கவர்ச்சியை வாரி இறைத்திருந்தார். இடையில் இவர்களின் விவாகரத்து வதந்தியும் வந்து ஓய்ந்தது.
 

44
Deepika New Pic Goes Viral:

மேலும் சமீபத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான 'கல்கி AD 2898' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த தீபிகா படுகோன்.. சுமார் ஆறு வருடங்களுக்கு பின்னர் கர்ப்பமாக இருக்கும் தகவலை  கடந்த ஆண்டு அறிவித்தார்.  அவ்வப்போது தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டு, இன்ப அதிர்ச்சி கொடுத்த தீபிகா படுகோனுக்கு செப்டம்பர் 8-ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து தீபிகா - ரன்வீர் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த நிலையில், தற்போது குழந்தையோடு தீபிகா படுகோன் உள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய செல்ல மகளை மார்போடு அணைத்து கொண்டு... தீபிகா படுகோன் குழந்தையை ரசிக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு, ரசிகர்களும் நெட்டிசன்களும் அப்படியே அழகில் அம்மா தீபிகாவை உரித்து வைத்திருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி உண்மையிலேயே மைசூர் மகாராஜா பேத்தியா?
 

click me!

Recommended Stories