பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. அதை தொடர்ந்து ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அட்லீ. பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து அசுர வளர்ச்சி கண்ட அட்லீ, கடந்த ஆண்டு பாலிவுட்டிலும் அறிமுகமாகி ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தை இயக்கினார்.
24
Atlee, shah rukh khan
ஜவான் திரைப்படம் கடந்த ஆண்டு தியேட்டரில் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் குருவை மிஞ்சிய சிஷ்யன் ஆகிவிட்டார் அட்லீ. அவரின் கால்ஷீட்டுக்காக தற்போது ஒட்டுமொத்த பாலிவுட்டே காத்திருக்கிறது. அவர் அடுத்ததாக சல்மான் கான் மற்றும் கமல்ஹாசனை வைத்து பான் இந்தியா படமொன்றை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படி பிசியான இயக்குனராக வலம் வரும் அட்லீ சைலண்டாக ஒரு பிரம்மாண்ட படத்தையும் தயாரித்து முடித்துள்ளார். பேபி ஜான் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். வருண் தவான் ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி. பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் தடம் பதித்து உள்ளார் அட்லீ.
அட்லீ தயாரித்துள்ள பேபி ஜான் திரைப்படம் வருகிற டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
44
Game Changer
ஆனால் தற்போது திடீர் ட்விஸ்டாக அப்படத்துக்கு போட்டியாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பேன் இந்தியா படமான கேம் சேஞ்சரும் அதே தேதியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பாக்ஸ் ஆபிஸில் குரு சிஷ்யன் மோதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை தில் ராஜு தயாரித்திருக்கிறார். இந்தியன் 2 தோல்விக்கு பின் இப்படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கர் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.