முதல் படமே ஹிட்... 'ஜெயம்' முதல் 'சைரன்' வரை! ஜெயம் ரவி நடித்த வெற்றிப்படங்கள் இத்தனையா?

First Published | Sep 10, 2024, 2:01 PM IST

இன்று தன்னுடைய 44-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி அவருக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
 

Jayam Movie

பிரபல படத்தொகுப்பாளர் மோகனின் மகனான ஜெயம் ரவி, 'ஒரு தொட்டில் சபதம்' என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் சில தெலுங்கு படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த பின்னர் தமிழ் சினிமாவில் தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் 'ஜெயம்' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, ஜெயம் திரைப்படத்தின் ரீமேக்காக 'ஜெயம்' என்கிற பெயரிலேயே வெளியானது .  இளம் ஹீரோவாக நடித்து, முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் ரவி.

இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் இவருடைய பெயரில் படத்தின் பெயரையும் இணைத்து ரசிகர்கள் ஜெயம் ரவி என அழைக்க தொடங்கி விட்டனர். 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கோபிசந்த், ராஜீவ், பிரகதி, நிழல்கள் ரவி, ராதாரவி, போன்ற பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

M. Kumaran Son of Mahalakshmi

இதைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி'. தெலுங்கில் இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் 'அம்மா நானா ஓ தமிழா அம்மாயி' என்கிற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் ஆக எடுக்கப்பட்ட இந்த படத்தை, தன்னுடைய தம்பி ஜெயம் ரவியை வைத்து மோகன் ராஜா இயக்கியிருந்தார். அம்மா சென்டிமென்டில் வெளியான இந்த படத்தில்... ஜெயம் ரவிக்கு அம்மாவாக நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகை நதியா தமிழ் ரீஎன்ட்ரி கொடுத்தார். அசின் கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், விவேக், ஐஸ்வர்யா, மனோபாலா, வையாபுரி, போன்ற பலர் நடித்திருந்தனர். 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ஜெயம் ரவிக்கு விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக மாறியது.

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி உண்மையிலேயே மைசூர் மகாராஜா பேத்தியா? கல்பனா ஹவுஸ் சீக்ரெட்டை உடைத்த பயில்வான்!

Tap to resize

Unakkum Enakkum:

இளம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்த பின்னர், ஜெயம் ரவி சில இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்த தாஸ், மழை, இதய திருடன், போன்ற படங்கள் படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றது. ஆனால் 2006 ஆம் ஆண்டு மீண்டும் தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகிய சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, Nuvvostanante Nenoddantana என்கிற படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான ' உனக்கும் எனக்கும்' திரைப்படம் ஜெயம் ரவிக்கு ஏராளமான பெண் ரசிகைகளை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் நடிகை திரிஷா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். வெளிநாட்டை சேர்ந்த ஹீரோ, மாமாவின் மகள் திருமணத்திற்கு வரும் போது கிராமத்து பெண்ணான திரிஷா மீது காதல் கொள்கிறார். இந்த காதலுக்காக ஒரு விவசாயியாக மாறி, அவர் படும் கஷ்டங்களை உயிரோட்டமான காட்சிகளுடன் காட்டி இருந்தார் மோகன் ராஜா. இந்த படம் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

Deepavali:

இயக்குனர் எழில் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த 'தீபாவளி' திரைப்படம் இவருக்கு சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது. தன்னுடன் பழகிய நினைவுகளை இழந்த காதலியை கரம்பிடித்து பில்லு எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதை எமோஷ்னலாக கூறி இருந்தார் இயக்குனர்.  இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பாவனா நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி தன்னுடைய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம், 2007-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

ஆர்த்திக்கு நடந்த சிசேரியன்; மயக்கம் போட்ட ஜெயம் ரவி! பிளாஷ் பேக் தகவல்!

Santhosh Subramiyam

இதைத் தொடர்ந்து தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தெலுங்கில் வெளியான 'பொம்மரியலு' என்கிற படத்தின் ரீமேக்காக ஜெயம் ரவி நடித்திருந்த திரைப்படம் 'சந்தோஷ் சுப்ரமணியம்' ஜெனிலியா ஹீரோயின் ஆக நடித்திருந்த இந்த படத்தில், பிரகாஷ்ராஜ், பிரேம்ஜி, ஸ்ரீநாத், சத்யன், கீதா, கௌசல்யா, எம் எஸ் பாஸ்கர், சடகோபன் ரமேஷ், போன்ற பலர் நடித்திருந்தனர். தன்னுடைய அப்பாவின் ஆசைப்படியே நடிக்கும் நாயகன்... தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க போராடும் மையகருத்தோடு... காதல், காமெடி, எமோஷன், சென்டிமென்ட்டோடு இப்படம் உருவாகி இருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு இந்த படம் தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்டு, மற்றும்  56வது ஃபிலிம் ஃபேர் விருதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, என்கிற நான்கு பிரிவில் விருதை பெற்றது.

Peranmani

அதே போல் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்திருந்த ஆக்சன் அட்வென்ச்சர் திரைப்படம் 'பேராண்மை'. சில கல்லூரி மாணவிகளுடன் காட்டுக்குள் செல்லும் ஜெயம் ரவி, தீவிரவாதிகளை எதிர்த்து போராட நேர்கிறது. அப்போது இந்தியாவின் ராக்கெட் லான்ச்சை தடுத்து நிறுத்த முயற்சிக்கும் தீவிரவாதிகளின் எண்ணம் எப்படி முறியடிக்கப்படுகிறது என்பதை விறுவிறுப்பான கதைக்களத்தில் கூறி இருந்தார் இயக்குனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் ஜெயம் ரவிக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

ஜெயம் ரவியை விட மூன்று மடங்கு கோடீஸ்வரியாக வாழும் அவரின் மனைவி ஆர்த்தி யார் தெரியுமா?

Romeo Juliet:

மேலும் ஜெயம் ரவி நடிப்பில் ஒரு ஜாலி என்டர்டைன்மென்ட் ரொமான்டிக் காமெடி களத்தில் வெளியான திரைப்படம் 'ரோமியோ ஜூலியட்'. ஹன்சிகா இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் லட்சுமணன் இயக்கி இருந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு வெளியாகி இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பணக்காரன் என ஜெயம் ரவியை காதலிக்கும் ஹன்சிகா பின்னர் அவரிடம் இருந்து விலக நினைக்கும் நிலையில்... வாழ்க்கைக்கு உண்மையான காதல் தான் முக்கியம் பணம் முக்கியம் இல்லை என்பதை புரிந்து கொண்டு ஜெயம் ரவியுடன் சேர்வதை அழகாக காட்டி இருந்தார் இயக்குனர்.
 

Thani Oruvan Movie

இதை தொடர்ந்து ஜெயம் ரவி தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில், பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் அவை அனைத்துமே ரீமேக் படங்களாக இருந்தன,  ஆனால் அன்னான் மோகன் ராஜா திரைக்கதை எழுதி இயக்கி 2015-ஆம் ஆண்டு வெளியான 'தனி ஒருவன் படத்தை படத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். ஐபிஎஸ் அதிகாரி மித்திரன் என்கிற வேடத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி... தனக்கான எதிரியை தானே முடித்து செய்து கொண்டு அரவிந்த் சாமியுடன் மோதுவதே இந்த படத்தின் கதைக்களம்.  ஆக்க்ஷன் திரில்லர் ஜார்னரில் எடுக்கப்பட்டிருந்தத இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார் . இப்படம் சுமார் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

இசைஞானியின் ஹிட் பாடலை அட்ட காப்பியடிச்சு.. மோகன் லால் படத்திற்காக விருதை தட்டி தூக்கிய இசையமைப்பாளர்!

Comali

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. சுமார் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார். காமெடி டிராமாவாக எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, கே எஸ் ரவிக்குமார் போன்ற பலர் நடித்திருந்தனர். தலையில் அடிபட்டு 16 வருடங்களை கோமாவில் கழித்து... கண் விழிக்கும் 90 கிட்ஸ் நினைவுகளை மீண்டும் ஞாபக படுத்துவது, மற்றும் தன்னுடைய தந்தை கொடுத்த சிலையை மீட்க போராடுவது தான் இந்த படத்தின் கதைக்களம். 

Ponniyin Selvan

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், இரண்டு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி, அருண் மொழி வர்மன் கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்திருந்தார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், இரண்டு பாகங்களாக வெளியாகி... இரண்டு பாகங்களும் சேர்ந்து சுமார் 800 கோடிக்கு மேல் வசூல் செய்தது.  ஜெயம் ரவியின் நடிப்பு இந்த படத்தில் பாராட்டப்பட்டது.

15 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது; ஜெயம் ரவி - ஆர்த்தியின் லவ் ஸ்டோரி எப்படிப்பட்டது தெரியுமா?

Siren

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சைரன்'. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க... முதல் முறையாக ஜெயம் ரவி வெள்ளை முடியுடன்... 15 வயது மகளுக்கு அப்பாவாக நடித்திருந்தார்.  தன்னுடைய மனைவியை கொலை செய்தவர்களை ஜெயம் ரவி பழிவாங்குவதே இந்த படத்தின் கதைக்களமாக அமைந்தது.

Latest Videos

click me!