
ரசிகர்களால் மில்க் பியூட்டி என அழைக்கப்படுபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானாலும் , அவர் ஹீரோயினாக நடித்த முதல் படம் கல்லூரி. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கல்லூரி படத்தின் வெற்றிக்கு பின்னர் கமர்ஷியல் ரூட்டுக்கு தாவிய தமன்னா, தமிழில் விஜய்க்கு ஜோடியாக சுறா, அஜித்துடன் வீரம், ரஜினியுடன் ஜெயிலர் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்தார்.
அண்மையில் தமிழில் தமன்னா நடிப்பில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இதேபோல் பாலிவுட்டில் அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஸ்ட்ரீ 2 திரைப்படமும் அதிரிபுதிரியான வெற்றியை ருசித்தது. இதனால் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என திரும்பிய பக்கமெல்லாம் தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
நடிகை தமன்னாவும், இந்தி நடிகர் விஜய் வர்மாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஆரம்பத்தில் சீக்ரெட்டாக காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த ஆண்டு தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த ஆண்டு இந்தியில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் தமன்னாவும், விஜய் வர்மாவும் ஜோடியாக நடித்திருந்தனர்.
லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்தபோது தான் தமன்னா, விஜய் வர்மா இடையே காதல் மலர்ந்தது. அதற்கு முன்னர் வரை ஹீரோக்களுடன் லிப்கிஸ் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கண்டிஷன் போட்டு வந்த நடிகை தமன்னா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் அந்த கண்டிஷன்களையெல்லாம் தளர்த்தி தன் காதலனுடன் லிப் கிஸ் காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
இதையும் படியுங்கள்... ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி உண்மையிலேயே மைசூர் மகாராஜா பேத்தியா? கல்பனா ஹவுஸ் சீக்ரெட்டை உடைத்த பயில்வான்!
தமன்னா - விஜய் வர்மா ஜோடி இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தற்போது திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் தனக்கில்லை என கூறி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் அவருக்கும் விஜய் வர்மாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டார்களா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
அந்த பூகம்பம் அடங்குவதற்குள் தற்போது தான் சந்தித்த காதல் தோல்வி பற்றி பேசி இருக்கிறார் தமன்னா. அதில், தான் இதற்கு முன்னாள் காதலித்த இருவருமே அருமையான மனிதர்கள் என கூறிய தமன்னா, அதில் எதுவுமே டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், அந்த காதல் தோல்வி தன்னை வாழ்வில் மேம்படுத்திக் கொள்ள உதவியதாக தமன்னா கூறி உள்ளார்.
நம் வாழ்க்கையில் வரும் அனைவரும் எதோ ஒரு காரணத்திற்காக தான் வருகிறார்கள். சிலநேரம் அவர்கள் உங்களுக்கு கர்பிக்க வருகிறார்கள். அதனால் அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அது வலியை தரும், அதை ஏற்றுக்கொண்டு நகர வேண்டும். அப்போது தான் உங்களை புரிந்துகொள்ளக்கூடிய ஒருவர் உங்களுக்கு கிடைப்பார்.
இளம்வயதிலேயே ஒருவரை பிடித்திருந்தது. அவருடன் பழகிய பின்னர், அவருக்கு அவரது கனவுகளை நிறைவேற்ற காதல் தடையாக இருந்ததால் அவர் பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து வேறொருவருடன் காதல் மலர்ந்தது. பொய்யாக தெரிந்த அந்த உறவை தொடர்வது மிகவும் கடினமாக இருந்தது. அதனால் பிரிந்துவிட்டோம். அந்த இரண்டு முறையும் காதல் தோல்வியால் மனமுடைந்துபோனேன் என தமன்னா கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... மூன்று முறை திருமணம் செய்துகொண்ட ஜெயம் ரவியின் தந்தை - ஏன் தெரியுமா?