
இன்று தன்னுடைய 44-ஆவது பிறந்த நாளை.. நடிகர் ஜெயம் ரவி கொண்டாடி வரும் நிலையில், நேற்றைய தினம் கனத்த இதயத்துடன் மனைவி ஆர்த்தி உடனான விவாகரத்து விஷயத்தை வெளிப்படையாக அறிவித்தார். இவர் வெளியிட்ட அறிக்கையில் "இந்த முடிவு நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைகளுக்கு பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்க்கையில் இருந்தது விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டது அல்ல.... என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்வுக்காக எடுக்கப்பட்டது" என தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே, கடந்த சில மாதங்களாகவே விவாகரத்து பிரச்சனை புகைந்து கொண்டிருப்பதாக தங்களுடைய பேட்டிகளில் கூறி வந்த சினிமா விமர்சகர்கள் பலர், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து பின்னணி குறித்த பல தகவல்களை, அலசி ஆராய்ந்து தங்களின் கண்ணோட்டத்தில் கூறி வருகிறார்கள். அதேபோல் ஜெயம் ரவி மனைவி, ஆர்த்தியின் குடும்ப பின்னணி குறித்த தகவல்களும் அதிகம் தேடப்படும் ஒன்றாக மாறி உள்ளது. நேற்றைய தினம், பிரபல தனியார் youtube சேனலுக்கு பேட்டியளித்த... சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியின் குடும்ப பின்னணி குறித்தும்... கல்பனா ஹவுஸ் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த தகவல் கேட்பவர்களையே ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
ஆர்த்திக்கு நடந்த சிசேரியன்; மயக்கம் போட்ட ஜெயம் ரவி! பிளாஷ் பேக் தகவல்!
அதாவது பலர் ஒரு பேச்சுக்காக.. நீ என்ன மைசூர் மகாராஜா பேத்தியா? என கேட்பது உண்டு. ஆனால் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி, உண்மையிலேயே மைசூர் மகாராஜாவின் பேத்தி முறை தானாம். இது குறித்து தன்னுடைய பேட்டியில் விலாவரியாக கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன், "சென்னையில் உள்ள கோட்டையில் இருந்து... கடற்கரைக்கு செல்லும் சாலையில் உள்ளது இரண்டு பெரிய பங்களாக்கள் தான். அதில் ஒன்றுதான் கல்பனா ஹவுஸ். இந்த கல்பனா ஹவுஸ் மைசூர் மகாராஜாவான ஜே.எஸ்.சாம்ராஜ் உடையார் தன்னுடைய சென்னை மனைவி கல்பனாவுக்கு வழங்கியது. அந்த கல்பனா தான் ஆர்த்தியின் சொந்த பாட்டி, அதாவது விஜயகுமாரின் தாயார்".
சுஜாதா - விஜயகுமார் தம்பதிகளுக்கு பிறந்த ஒரே மகள் தான் ஆர்த்தி. மிகவும் செல்லமாக வளர்ந்த பணக்கார வீட்டுப் பெண். ஜெயம் ரவியுடன் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே, இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் ஜெயம் ரவி சினிமாவில் நடிக்க துவங்கிய பின் இது குறித்து தன்னுடைய பெற்றோரிடம் பேசி இருதரப்பு சம்மதத்துடன் ஆர்த்தி - ரவி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர் என தெரிவித்துளளார்.
ஜெயம் ரவியை விட மூன்று மடங்கு கோடீஸ்வரியாக வாழும் அவரின் மனைவி ஆர்த்தி யார் தெரியுமா?
தொடர்ந்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன்.. ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே பிரச்சனை ஏற்பட அவரின் மாமியார் சுஜாதாவும் ஒரு காரணம் தான்.இயக்குனர் பாண்டிராஜ் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரிடம் ஒரு படத்தின் கதையை கூறி உள்ளார். அவருக்கு கதை பிடித்து போகவே, அந்த கதையை மருமகனிடம் கூற சொல்லி உள்ளார். ஜெயம் ரவிக்கும் கதை பிடித்து போனதால்... மருமகனிடம் சம்பளம் குறித்து கேட்க, அவர் தனக்கு 20 கோடி வேண்டும் என கூற... பாண்டிராஜை அழைத்து அவர் இந்த படத்திற்கு போட்டு கொடுத்த 53 கோடி பட்ஜெட்டில் ஏதாவது குறைக்க முடியுமா என கேட்டுள்ளார். பாண்டிராஜ் அதெல்லாம் முடியாது என கறாராக பேசவே... இந்த கதையை ஜெயம் ரவியிடம் கூறி படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமானது. மாமியாரால் ஒரு வெற்றி படத்தை நழுவ விட்டுவிட்டோமே என்கிற கோவம் அப்படியே ஆர்த்தி மீது திரும்பியதும் தான் இந்த விவாகரத்துக்கு ஒரு காரணம் என தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.