தலைவருக்கே தண்ணிகாட்டிய தளபதி... பாக்ஸ் ஆபிஸில் கோட் படைத்த புது சாதனை

Published : Sep 10, 2024, 10:42 AM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புது சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.

PREV
15
தலைவருக்கே தண்ணிகாட்டிய தளபதி... பாக்ஸ் ஆபிஸில் கோட் படைத்த புது சாதனை
Rajinikanth vs Vijay

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியாகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் திரைப்படம் கோட். இப்படம் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் விஜய் இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். தளபதிக்கும் இளைய தளபதிக்கும் இடையேயான மோதலை வைத்து தான் படமாக எடுத்துள்ளார் வெங்கட் பிரபு.

25
The Greatest of all time

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, அஜமல், பிரேம்ஜி, விடிவி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது. வெளியான முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது கோட் திரைப்படம். அதுவும் தமிழ்நாட்டில் இப்படம் 5 நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இதையும் படியுங்கள்... ஜெயிலருக்கே ஜெயிலா! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இத்தனை முறை கைதாகி இருக்கிறாரா? பலரும் அறிந்திடாத தகவல்

35
Thalapathy Vijay

தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் செய்த படங்களை கொடுத்த தமிழ் நடிகர் என்கிற சாதனையை விஜய் படைத்துள்ளார். அவர் நடிப்பில் வெளியவந்த 8 படங்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை வாரிக்குவித்து இருக்கிறது. விஜய்க்கு அடுத்தபடியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளார். அவர் நடிப்பில் வெளிவந்த 3 படங்கள் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளன.

45
GOAT creates record in Boxoffice

கோட் படம் ரிலீஸ் ஆகி 5 நாட்களில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. இதில் நேற்று மட்டும் இப்படம் ரூ.14 கோடி வசூலித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 110 கோடிக்கு மேல் வசூலித்துள்ள கோட் திரைப்படம். கர்நாடகாவில் 22 கோடியும், கேரளாவில் 11 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 10 கோடியும் இதர மாநிலங்களில் 14 கோடியும் வசூலித்து உள்ளது.

55
GOAT Movie Box Office Record

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் ரூ.175 கோடியும் வெளிநாடுகளில் ரூ.125 கோடியும் வசூலித்துள்ள கோட் திரைப்படம் உலகளவில் 300 கோடி வசூலை வாரிக்குவித்து இருக்கிறது. இதில் மற்றொரு ஆச்சர்ய தகவல் என்னவென்றால் உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய தமிழ் நடிகர்கள் பட்டியலில் ரஜினி, விஜய் இருவரும் 3 படங்களுடன் சமமாக இருந்த நிலையில், கோட் படம் மூலம் ரஜினியை முந்தி இருக்கிறார் விஜய். அவரின் பிகில், வாரிசு, லியோ போன்ற 300 கோடி வசூல் படங்கள் வரிசையில் தற்போது கோட்டும் இணைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... கோடாங்கி பேச்ச கேட்காம தப்பு பண்ணிட்டேன்; 18 வருஷமா என் கணவரை காணவில்லை - பகீர் கிளப்பிய ரேகா நாயர்

Read more Photos on
click me!

Recommended Stories