
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்கிற விவாத நிகழ்ச்சி வாரந்தோறும் நடத்தப்படும். அதில் பல விஷயங்கள் மிகவும் பரபரப்பாக பேசபட்டு உள்ளன. அதில் ஒன்று தான் ஜோதிடம் பற்றியது. ஜோதிடத்தை நம்புபவர்கள் ஒரு பக்கமும், நம்பாதவர்கள் ஒரு பக்கமும் விவாதித்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதில் மாரிமுத்து ஜோதிடர்களை சரமாரியாக விமர்சித்தார். அப்போது ஒரு ஜோதிடர் அவருக்கு இடுப்புக்கு மேல் பிரச்சனை உள்ளது என எச்சரித்தார்.
அவர் எச்சரித்த அடுத்த சில மாதங்களிலேயே மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரின் இந்த இறப்பும், ஜோதிடர்கள் சொன்ன அந்த கணிப்போடு ஒப்பிட்டு பேசப்பட்டது. இந்த நிலையில், அதே டாப்பிக் இந்த ஆண்டும் விவாதிக்கப்பட்டது. இதில் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் கலந்துகொண்டனர். அப்படி ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளவராக கலந்துகொண்ட நடிகை ரேகா நாயர், தன் கணவர் தொலைந்து போன கதையை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதில் அவர் பேசியதாவது : 19 வயதில் நான் திருமணம் செய்துகொண்டேன். நானும் கணவரும் தங்கியிருந்த வீட்டின் வாசலில் வந்து இரவு கோடாங்கி ஒருவர், இந்த வீட்ல இருக்குற வண்டிக்கு ஏற்ற சக்கரம் கிடையாது என சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அந்த வயசுல எனக்கு அது புரியல. ஆனால் என் பக்கத்து வீட்டில் இருக்கும் அம்மா ஒருவர் ரேகா கொஞ்சம் பாத்து இருனு சொன்னாங்க. அவங்களுக்கு ஜோதிடம் மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது.
அதற்கு நான், அது அவன் வேலையில்லாம குடிச்சிட்டு வந்து சொல்லிருப்பான்னு சொன்னேன். ஆனா எண்ணி 4வது வருஷத்துல தொலைந்து போன என் முதல் கணவர், இன்றுவரை எங்க போனார், எப்படி இருக்கிறார், உயிரோடு இருக்கிறாரா என எந்த தகவலும் இல்லை. 18 வருஷமா அவர் இல்லை. சமீபத்தில் ஒரு 3 ஆண்டுகளுக்கு முன்னர் தான் நான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன்.
இதையும் படியுங்கள்... ஒருவழியா ஹீரோவை பைனல் பண்ணிட்டாரு - லைகா தயாரிப்பில் களமிறங்கும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்!
அந்த கோடாங்கி சொன்னபோது அதை நான் நம்பவில்லை. ஆனால் இன்றைக்கும் அது என்னை உருத்துகிறது. ஒருவேலை அவரை கூப்பிட்டு கேட்டிருக்கலாமோ என்று; அல்லது அந்த நேரம் ஒரு ஜோதிடரை பார்த்திருக்கலாமோ என்று இப்போ எனக்கு உருத்துகிறது. இதைக்கேட்டு ஷாக் ஆன தொகுப்பாளர், திடீரென தொலைந்துவிட்டாரா உங்கள் கணவர் என கேட்க, அதற்கு அவர், ஆமாம், காலையில் வேலைக்கு போனவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறினார்.
பின்னர் அவருடைய நண்பர்களிடம் விசாரித்தபோது அவர் பெங்களூருக்கு சென்றுவிட்டதாக சொன்னார்கள். அவருடைய சொந்த ஊருக்கு தேடி போனோம். அவங்களும் இங்க வரலனு சொல்லிட்டாங்க. கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கழித்து அவர் உயிரோடு இருக்கிறார்னு நினைக்கிறோம் என்று தகவல் மட்டும் வந்தது. ஆரம்பத்தில் எனக்கு ஜோதிடத்தில் சுத்தமாக நம்பிக்கை இல்லை. அதற்கு எதிராக பல இடங்களில் பேசி இருக்கிறேன்.
ஒரு கட்டத்தில் எனக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் சொந்த ஊரில் இருந்து சென்னை வந்தேன். பின்னர் ஜோசியர்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியை நடத்தினேன்.
அதில் வந்த அத்தனை ஜோசியரையும் நோண்டி நொங்கெடுத்துட்டேன். ஏனெனில் எனக்கு ஜோசியத்தின் மீது நம்பிக்கையே கிடையாது. அப்போது வந்த ஜோசியர் ஒருவர் உங்களுக்கு இரண்டாம் திருமணம் நடக்கும், நடக்கும்போது என்னை வந்து பாருங்கள் என சொன்னார்.
என்னுடைய மகளுக்கும், எனக்கும் நட்சத்திரப்படி, கிரஹனப்படி ஒன்றாகவே இருக்க முடியாது. இன்றைக்கு வரை என்னுடைய மகள் விடுமுறையில் மட்டும் தான் வீட்டுக்கு வருகிறாள். கிட்டத்தட்ட அவளுடைய வாழ்க்கை முழுவதும் போடில தான். எங்க அப்பா, அம்மா கூட தான் இருந்தா. என் பொண்ணு என்கூட இருந்தா அடிக்கடி சண்டை வருது. ஒன்னு அவ செத்துருவா, இல்லேனா நான் செத்துருவேன். அந்த சூழ்நிலை வந்துகொண்டே இருந்தது. அதனால் பிரிந்து வாழ்ந்து வருகிறோம் என கூறினார்.
இதையும் படியுங்கள்... தீபாவளி ரேஸில் விடாமுயற்சி? SKவுக்கு தலைவலி கொடுக்க வருகிறாரா தல? லேட்டஸ்ட் அப்டேட்!