Actress Bhavana
கேரளாவின் திருச்சூரில் பிறந்த நடிகை பாவனாவின் தந்தை ஜி. பாலச்சந்திரன், மலையாள திரை உலகில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சூரிலேயே தனது பள்ளி படிப்பை முடித்த பாவனா, சிறு வயது முதலே நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் தான் வளர்ந்து வந்தார். இந்த சூழலில் தான் தனது 16 வது வயதில் மலையாள மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை அவர் தொடங்கினார்.
ஒருவழியா ஹீரோவை பைனல் பண்ணிட்டாரு - லைகா தயாரிப்பில் களமிறங்கும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்!
Bhavana
மலையாள மொழியில் அவர் அறிமுகமான இரண்டு ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை பாவனா, கடந்த 2006ம் ஆண்டு தமிழில் வெளியான பிரபல இயக்குனர் மிஷ்கினின் "சித்திரம் பேசுதடி" திரைப்படத்தின் மூலம் தான் தனது கோலிவுட் பயணத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக "வெயில்", "தீபாவளி", "கூடல் நகர்" போன்ற திரைப்படங்கள், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாவனாவிற்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.
Kollywood Actress Bhavana
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகள் மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் தொடர்ச்சியாக நல்ல பல படங்களில் நடித்து வந்த பாவனா, கடந்த 2018ம் ஆண்டு கன்னட மொழியில் பெரும் தயாரிப்பாளராக விளங்கி வந்த நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன்பு அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு கசப்பான நிகழ்வின் காரணமாக, சில வருடங்களாக அவர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
Malayalam Actress Bhavana
தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள நடிகை பாவனா, மலையாள மொழியை விட கன்னட மொழியில் தான் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் "தி டோர்" என்ற தமிழ் திரைப்படத்திலும் அவர் இப்போது நடித்து வருகிறார். இறுதியாக அவர் தமிழில் கடந்த 2010ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான "அசல்" திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே சுமார் 14 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் தமிழ் மொழியில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.
தீபாவளி ரேஸில் விடாமுயற்சி? SKவுக்கு தலைவலி கொடுக்க வருகிறாரா தல? லேட்டஸ்ட் அப்டேட்!