அதேபோல தமிழில் கடந்த 2000வது ஆண்டு பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான "அலைபாயுதே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் கார்த்திக் குமார். தொடர்ச்சியாக ஹிந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று மூன்று மொழிகளிலும் பல திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும், தான் "டைப் காஸ்ட்" படுத்தப்படுவதாக அவர் பலமுறை வேதனையோடு பேசியுள்ளார். "டைப் காஸ்டிங்" என்பது, ஒரே வகையான கதாபாத்திரங்களுக்கு மட்டுமே, ஒரு குறிப்பிட்ட நடிகரை நடிக்க அழைப்பது.
தமிழ் சினிமாவில் நல்ல சாக்லேட் பாயாக வலம் வந்த அவர் கடந்த 2005ம் ஆண்டு பிரபல பாடகி சுசித்ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து சுமார் 12 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால் தனது கணவர் ஒரு ஓரினசேர்கையாளர் என்பது தனக்கு கல்யாணமான சில ஆண்டுகளிலேயே தெரிந்துவிட்டது என்றும், ஆனால் குடும்பத்தாரின் வற்புறுத்தலால் அவரை பிரியாமல் தான் இருந்ததாகவும் கூறி இருந்தார். இந்த சூழலில் தான் கடந்த 2017ம் ஆண்டு இந்த ஜோடி விவாகரத்து பெற்றது. அதன் பிறகு அம்ரிதா சீனிவாசன் என்பவரை கடந்த 2021ம் ஆண்டு கார்த்திக் குமார் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தன்னுடைய பாலினம் குறித்து பலரிடம் வெளியில் சொல்லாமல் இருக்கிறார். அப்படி அவர் தயங்குவது ஏன் என்று பகிரங்கமாக பல கேள்விகளை அவர் எழுப்பிய நிலையில், நான் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மதிப்பு கொடுப்பவன், ஆனால் என்னுடைய பாலினத்தை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கூறி கார்த்திக் குமார் அதற்கு பதிலும் அளித்திருந்தார்.