'லியோ' வசூலை நெருங்க கூட முடியல... திணறும் தளபதியின் 'கோட்'! அதிகார பூர்வ வசூலை வெளியிட்ட படக்குழு!

First Published | Sep 9, 2024, 9:19 PM IST

தளபதி விஜய்யின் கோட் திரைப்படம், கடந்த நான்கு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றிய அதிகார பூர்வ தகவலை தற்போது அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 

GOAT Movie

தளபதி விஜய், முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள "கோட்" திரைப்படம்... கடந்த வாரம் அதாவது (செப்டம்பர் 5ம் தேதி வெளியானது" இப்படம் வெளியாகி இன்றுடன் நான்கு நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், இந்த படத்தின் வசூல் குறித்து, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். அதன் படி நான்கு நாட்களில் தளபதியின் 'கோட்' திரைப்படம், உலக முழுவதும்  ரூபாய்.288 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளார். 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் அதிகம் என்றாலும், 'லியோ' படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க முடியாமல் திணறி வருவதையும் பார்க்க முடிகிறது.
 

Leo Collection

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படம், தளபதியை ஒரு கேங் லீடராகவும், தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஒரு சாமானிய மனிதனாகவும் பார்க்க வைத்தது. இந்த படத்தில் தளபதி டபுள் ஆக்ஷனா? என பலர் கேட்க்கும் அளவுக்கு விஜய் கிளைமேக்ஸ் காட்சியில் பர்ஃபாம்மேன்ஸில்  ஸ்கோர் செய்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், 4 நாட்களில் இந்த படத்தின் முழு பட்ஜெட்டை தாண்டி வசூலை அள்ளியது. அதாவது இப்படம் ரூபாய்.250 கோடி முதல் ரூபாய். 300 கோடி வரை பட்ஜட்டில் எடுக்கப்பட்டு... நான்கு நாட்களில் ரூபாய்.350 கோடி வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

கேரவனில் சீக்ரெட் கேமரா விவகாரம்; மோகன் லாலுடன் பேசியது என்ன? ராதிகா போட்டுடைத்த உண்மை!
 

Latest Videos


The GOAT Fourth day collcetion report out

ஆனால், 'கோட்' திரைப்படம் ரூபாய்.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 4 நாட்கள் ஆகியும் ரூபாய்.300 கோடி வசூலை கூட எட்ட முடியாமல் திணறி வருகிறது. 'கோட்' திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் ரூபாய்.126 கோடி வசூல் செய்தது. பின்னர் இரண்டாவது நாள் வெள்ளி கிழமை என்பதால், வசூலில் டல் அடிக்க துவங்கியது. ஆனால் சனி மற்றும் ஞாயிறு என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வந்ததால்... ரூபாய்.250 கோடி வசூலை தாண்டியுள்ள தளபதியின் 'கோட்' எப்படியும் நாளை ரூபாய்.300 கோடிக்கு மேல் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Vijay acting Negative shade

இதுவரை நடித்த படங்களை விட, தளபதியை இந்த படத்தில் தன்னை ஹீரோவாக மட்டும் இன்றி வில்லனாகவும் பார்க்க முடிந்தது. அதே போல் இந்த படத்திற்காக விஜய் முதல் முறையாக கிளீஷ் ஷேவ் செய்து நடித்ததாகவும்... வெங்கட் பிரபு கூறி இருந்தார். AI தொழில்நுட்பம் மூலம் தளபதி விஜய்யை டீன் ஏஜ் பாய்யாக ரசிகர்கள் கண் முன் நிறுத்தினர் வெங்கட் பிரபு. இதே தொழில்நுட்பம் மூலம் தளபதி விஜய்யுடன் பல வருடங்கள் கழித்து விஜயகாந்தையும் ஒரே ஒரு காட்சியில் பார்க்க முடிந்தது. மறைந்த பாடகி பாவதாரணியின் குரலுக்கு மீண்டும் நவீன தொழில்நுட்பம் மூலம் உயிரூட்டி இருந்தது... வெங்கட் பிரபு தன்னுடைய தங்கை மீது எந்த அளவு பாசம் வைத்துள்ளார் என்பதையும் அறிய வைத்தது.

இசைஞானியின் ஹிட் பாடலை அட்ட காப்பியடிச்சு.. மோகன் லால் படத்திற்காக விருதை தட்டி தூக்கிய இசையமைப்பாளர்!

GOAT vs Leo

இந்த படத்தில் பல வருடங்களுக்கு பின்னர் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருந்த நிலையில்... இன்னொரு விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்திரி நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் மைக் மோகன், பார்வதி நாயர், வைபவ், பிரஷாந்த், லைலா, பிரபு தேவா, பிரேம் ஜி அமரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள 69-ஆவது படம் தான் தன்னுடைய கடைசி படம் என கூறி இருந்ததால், 'கோட்' படத்தின் மீனாதான எதிர்பார்ப்பும் அதிகரித்தே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் தற்போது தளபதி 69 படம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில்... தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டுக்கு ஆயத்தம் ஆகி உள்ளார். 

click me!