ஆர்த்திக்கு நடந்த சிசேரியன்; மயக்கம் போட்ட ஜெயம் ரவி! பிளாஷ் பேக் தகவல்!

First Published | Sep 9, 2024, 6:58 PM IST

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஜோடியின் விவாகரத்து குறித்த தகவல் ஒருபுறம் பரபரப்பாக பார்க்கப்படும் நிலையில், இவர்களின் பழைய பேட்டியில் குழந்தை பிறந்த தருணம் குறித்து கூறியுள்ள ஃபிளாஷ் பேக் தகவலை பார்ப்போம்.
 

Jayam Ravi Chocolate Boy Image:

தமிழ் சினிமாவில் ஹீரோ என்கிற இடத்தை பிடிக்க அருண் விஜய், விக்ரம் பிரபு, அதர்வா, போன்ற வாரிசு நடிகர்களின் பிள்ளைகளே தடுமாறிய சமயத்தில், 'ஜெயம்' படத்தில் அறிமுகமாகி, கில்லி போல் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தான் ஜெயம் ரவி. முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான இளம் பெண்கள் மனதை கவர்ந்த நாயகனாக மாறினார். இதை தொடர்ந்து இவர் தேர்வு செய்து நடித்த உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி போன்ற படங்கள் ஜெயம் ரவிக்கு சாக்லேட் பாய் இமேஜை பெற்றுத்ததந்தது.

Jayam Ravi And Aarti Divorce:

தற்போது ஆக்ஷன் ஹீரோவாக மாறி பல படங்களில் பட்டையை கிளப்பி வரும் ஜெயம் ரவியை... 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வேறு விதமாக பார்க்க வைத்தது. மணிரத்னம் இயக்கத்தில் நடித்த இந்த படத்தில் ஜெயம் ரவி, ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்து அசர வைத்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய அம்மா, அப்பா, அண்ணன், மனைவி என அனைவருடனும் ஜாலியாக இன்டர்வியூ கொடுத்து அதில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட ஜெயம் ரவி, தற்போது விவாகரத்து முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு பல யோசனைகளுக்கு பின்பே எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தரப்பில் இருந்து, எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில், ஜெயம் ரவி தன்னை சார்ந்தவர்கள் நலனுக்காக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறி உள்ளதால், இது குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட விவாகரத்து என்றே நினைக்க தோன்றுகிறது.

அரசியலுக்காக விஜயகாந்த் சென்டிமென்ட்டை விடாமல் துரத்தும் விஜய்! ஆச்சர்ய தகவல்!

Tap to resize

Jayam Ravi About Wife Delivery:

கடந்த ஆண்டு கொடுத்த பேட்டியில்.. தொகுப்பாளர்கள் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியிடம் குழந்தை பிறந்த தருணம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதில் அளித்த ஆர்த்தி, தன்னுடைய மகன் ஆரவ் பிறக்கும் போது ரவி தன்னுடன் இல்லை. அவர் ஷூட்டிங் சம்மந்தமாக பாரிஸ் சென்று விட்டார். டெலிவரி சமயத்தில் என்னுடன் இருக்க வேண்டும் என்று தான் பிளான் செய்தார். ஆனால் எனக்கு குழந்தை முன்பே பிறந்து விட்டதால் அவரால் என்னுடன் இருக்க முடியவில்லை என கூறினார். அதே போல் ஜெயம் ரவி நான் ஷூட்டிங்கில் இருந்தாலும் மனசு முழுவதும் இங்கு தான் இருந்தது. என்னுடைய அப்பா அங்கு என்ன நடக்கிறது என்பதை சொல்லி கொண்டே இருந்தார். பின்னர் குழந்தை பிறந்ததை கூறிய பின்பே எனக்கு நிம்மதி ஆனது.

Jayam Ravi Emotional Moment:

இதை தொடர்ந்து இரண்டாவது குழந்தை குறித்து பேசிய போது... "அயான் பிறக்கும் போது, ஆர்த்தியை சிசேரியன் செய்ய, அழைத்து சென்றார்கள். எனக்கும் உள்ளே இருக்க டிரஸ் எல்லாம் கொடுத்தார்கள். அவங்க வயிற்றில் மார்க் செய்வதை பார்த்ததுமே எனக்கு மயக்கம் வந்துடுச்சு. நான் ஒரு மாதிரி ஆகிட்டேன். பின்னர் என்னை எங்க அம்மா ஒரு அரை விட்டு... உனக்கு என்ன ஆச்சு என மயக்கத்தில் இருந்து எழுப்பிய கேப்பில் அயான் பிறந்துவிட்டான் என தெரிவித்துள்ளார். மேலும் தான் கர்ப்பமாக இருந்த சமயத்தில். ரவி தன்னை மிகவும் அதிக அக்கறை எடுத்து பார்த்து கொள்வர். சில நேரங்களில் நான் வாந்தி எடுத்தால் கூட கையில் பிடித்து கொள்வார். மறு நாள் அவருக்கு ஷூட்டிங் இருக்கும்... ஆனால் நான் திடீர் என எழுந்து ஏதாவது சாப்பிட கேட்டால் உடனே ஏதாவது பழங்கள் கட் செய்து கொடுப்பர். கணவராக அவருக்கு 100 மார்க் கொடுக்கலாம் என புகழ்ந்து பேசினார். இப்படி பேசி ஒரு வருடமே ஆகும் நிலையில்... இப்போது இவர்களின் விவகாரம் விவாகரத்தில் வந்து நிற்கிறது. 

ஜெயம் ரவியை விட மூன்று மடங்கு கோடீஸ்வரியாக வாழும் அவரின் மனைவி ஆர்த்தி யார் தெரியுமா?

Latest Videos

click me!