ப்ரோஸ்தெடிக் மேக்கப்.. 39 ஆண்டுகளுக்கு முன்பே ட்ரயல் பார்த்த "ஆண்டவர்" - எந்த படத்தில் தெரியுமா?

First Published Sep 9, 2024, 4:57 PM IST

Kamal Haasan Prosthetic Makeup : உலக நாயகன் கமல்ஹாசன் சுமார் 39 ஆண்டுகளுக்கு முன்பே ப்ரோஸ்தெடிக் மேக்கப் கலையை தனது படத்தில் ட்ரயல் பார்த்துள்ளார்.

Avvai Shanmugi

கடந்த 20 ஆண்டுகளில் இந்திய சினிமாவின் பரிணாம வளர்ச்சி மிகப்பெரிய உச்சத்தை கண்டுள்ளது என்றே கூறலாம். குறிப்பாக மேக்அப் எனப்படும் ஒப்பனை என்று வரும்போது, அதில் புகைத்தப்படும் நுணுக்கங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. குறிப்பாக கமலின் "அவ்வை சண்முகி", ரித்திக் ரோஷனின் "தூம் 2" மற்றும் அமிதாப் பச்சனின் "பா" போன்ற படங்களில் அதில் இடம்பெற்ற ஒப்பனைக்காகவே பெரிய அளவில் பேசப்பட்டது. வெளிநாட்டில் மிகவும் பிரபலமான Prosthetic என்ற ஒரு வகை மேக்அப், மேற்கூறிய அனைத்து படங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

கமலின் அவ்வை சண்முகி.. 1993ம் ஆண்டு ஹாலிவுட் உலகில் வெளியான ஒரு திரைப்படத்தின் லேசான தழுவல் தான் கடந்த 1996ம் ஆண்டு தமிழில் வெளியான அவ்வை ஷண்முகி. தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி அந்த படம் தான் இந்திய சினிமாவில் முதல் முறையாக, ப்ரோஸ்தெடிக் மேக்கப் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்ட ஒரு படம் என்று கூறப்படுகிறது. தனது மகளின் பாசத்திற்காக ஏங்கும் தந்தை, பெண்ணாக வேடமிட்டு அந்த குழந்தையோடு நேரத்தை கழிப்பதை போன்ற ஒரு கதை அது. 

இந்த படம் வெளியான பிறகு பல ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் இந்த வகை ப்ரோஸ்தெடிக் மேக்கப் பயன்படுத்தப்பட்டது. அது குறித்து பின்வருமாறு பார்க்கலாம், ஆனால் அவ்வை ஷண்முகி படம் வெளியாவதற்கு 21 ஆண்டுகளுக்கு முன்பே அதை கமல்ஹாசன் ஒரு படத்தில் சோதித்தும் பார்த்துள்ளார் அந்த படம் குறித்தும் இந்த பதிவில் காணலாம்.

ஜெயம் ரவியை விட மூன்று மடங்கு கோடீஸ்வரியாக வாழும் அவரின் மனைவி ஆர்த்தி யார் தெரியுமா?

Makdee Movie

சினிமாவை பொருத்தவரை தொழில்நுட்ப ரீதியாக பல நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தவர் உலகநாயகன் கமல்ஹாசன். அந்த வகையில் இந்த ப்ரோஸ்தெடிக் மேக்கப்பை கூட இந்திய சினிமாவிற்கு அவர் தான் அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது. கமல் நடிப்பில் கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் வெளியான அவ்வை ஷண்முகி திரைப்படம் வெளியான சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து, ஹிந்தியில் வெளியான "Makdee" என்கின்ற திரைப்படத்தில் இதே வகையான ப்ரோஸ்தெடிக் மேக்கப்புகள் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த திரைப்படத்தில் பேயாக நடித்த பிரபல நடிகை ஷபானா ஆஸ்மிக்கு தான் அந்த ப்ரோஸ்தெடிக் மேக்கப் செய்யப்பட்டிருக்கிறது. இரு வேறு கதாபாத்திரங்களில் தோன்றி அனைவரையும் மிரட்டியிருப்பர் அவர். இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் அந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் ப்ரோஸ்தெடிக் மேக்கப் போட்டு நடித்த ஷாபனாவை விட அந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்வேதா என்ற இளம் பெண்ணுக்கு அப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

வெளிநாடுகளிலும் பல சிறப்பான விருதுகளை இந்த திரைப்படம் குவித்தது, அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக இந்த ப்ரோஸ்தெடிக் மேக்கப் அந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டு, தத்ரூபமாக பல விஷயங்களை அமைத்ததால் தான் அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டது.

Latest Videos


Dhoom 2 Movie

அதன் பிறகு இந்த ப்ரோஸ்தெடிக் மேக்கப் பெரிய அளவில் தமிழ் திரைப்படங்களில் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், தொடர்ச்சியாக ஹிந்தி மொழி திரைப்படங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக கடந்த 2006ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்த, பிரபல நடிகர் ரித்திக் ரோஷனின் "தூம் 2" திரைப்படத்தில் இந்த ப்ரோஸ்தெடிக் மேக்கப் பயன்படுத்தப்பட்டது. 

குறிப்பாக சிலை போல ஒரு மியூசியத்தில் ஒளிந்து இருந்து அவர் திருடும் காட்சிகளை நாம் பார்த்து வியந்திருப்போம். அதில் சிலை போல ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்த ரித்திக் ரோஷனுக்கு பயன்படுத்தப்பட்டது இந்த ப்ரோஸ்தெடிக் மேக்கப் தான். அதை தொடர்ந்து பிரபல நடிகர் அமிதாபச்சன் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான "பா" என்கின்ற திரைப்படத்திலும் இதே ப்ரோஸ்தெடிக் மேக்கப் பயன்படுத்தப்பட்டது. அமிதாப்பச்சனுக்கு அந்த ப்ரோஸ்தெடிக் மேக்கப் போட்டது, ஹாலிவுடை கலக்கிய "The Lord of the Rings" திரைப்பட நிறுவனத்தை சேர்ந்த ஒரு மேக்கப் கலைஞர் தானாம்.

கடந்த 2018ம் ஆண்டு தமிழில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்த ப்ரோஸ்தெடிக் மேக்கப் பயன்படுத்தப்பட்டது. உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ப்ரோஸ்தெடிக் மேக்கப் போட்டு நடித்து அசத்தியள்ளார்.

Oru Kaithiyin Dairy

சரி இதுவரை நாம் பார்த்த படங்கள் அனைத்துமே ஓரளவு தொழில்நுட்ப வளர்ச்சியை கண்ட காலத்தில் எடுக்கப்பட்ட படங்கள் என்பதால் இதில் இந்த ப்ரோஸ்தெடிக் மேக்கப் பயன்படுத்தப்பட்டது பெரிய விஷயமாக பார்க்கப்படவில்லை. ஆனால் உலக நாயகன் கமல்ஹாசன் சுமார் 39 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1985 ஆம் ஆண்டு வெளியான தன்னுடைய ஒரு கைதியின் டைரி என்ற படத்திலேயே இந்த ப்ரோஸ்தெடிக் மேக்கப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அசத்தியுள்ளார்.

ஒரு கைதியின் டைரி என்கின்ற திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில், வில்லனை கொல்லத்துடிக்கும் கமல், வீர சிவாஜி போல வேடமிட்டு ஒரு சிலை போல காத்திருப்பர். அது கமல் இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய படம். உண்மையில் ஒரு கணம் பார்க்கும்போது நமக்கே அது சிலையா இல்லையா என்ற வியப்பு வரும். பெரிய தொழில்நுட்பம் இல்லாத அந்த காலத்திலேயே அப்படி ஒரு சம்பவத்தை செய்து அசத்தியுள்ளார் கமல்ஹாசன். 

Jr NTR கார் நம்பர் பிளேட்டில் உள்ள ரகசியம் தெரியுமா?

click me!