ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானபோது, மலையாள திரையுலகில், சிலர் கேரவனில் ரகசிய கேமரா வைத்திருப்பதாக கூறி பகீர் கிளப்பிய ராதிகா, இது சம்மந்தமாக மோகன் லாலுடன் பேசியது குறித்து தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த இரண்டு வாரமாக மலையாள திரையுலகில் பற்றி எறிந்து கொண்டிருக்கிறது ஹேமா கமிட்டியின் அறிக்கை விவகாரம். அதாவது கடந்த 2017-ஆம் ஆண்டு பிரபல நடிகைக்கு காரில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு பின்னர் பிரபல மலையாள நடிகர் உட்பட 4 பேர் இருப்பது தெரியவந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதோடு, மலையாள திரையுலகில் இருக்கும் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற கருத்தை நடிகைகள் முன் வைத்ததால், இதனை முறையாக விசாரிக்க 'ஹேமா கமிட்டி' என்கிற குழுவை முதல்வர் பினராயி விஜயன் உருவாக்கினார். இதன் மூலம் மலையாள நடிகைகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள், மற்றும் இதில் சம்மந்தப்பட்ட நடிகர்கள் யார் யார் என்பது பற்றி தகவல் சேகரிக்கப்பட்டது.
24
Radhika about hema committee
இந்த அறிக்கையை முதலமைச்சரிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா 2019-ஆம் ஆண்டு ஒப்படைத்த நிலையில் 4 வருடங்களுக்கு பின், இதில் சம்மந்தப்பட்ட சில பிரபலங்களின் பெயர்கள் வெளியானது. இதனால் மலையாள திரையுலகில் மிகப்பெரிய பூகம்பமே வெடித்த நிலையில், AMMA நடிகர் சங்க தலைவரான மோகன் லால் இந்த பிரச்னையை நின்று சமாளிக்காமல், அதிரடியாக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். மேலும், இவருக்கு கீழ் இருந்த செயலாளர்கள் 17 பெரும் அடுத்தடுத்து பதவி விலகினர். இந்த விவகாரம் ஒருபுறம் புகைந்து கொண்டிருக்க அடுத்தடுத்து பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அநீதியை ஓப்பனாக கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை ராதிகா மலையாள திரையுலகை சேர்ந்த சிலர் கேரவனில் ரகசிய கேமரா வைத்து உடை மாற்றுவதை படம் பிடித்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்து ராதிகா கூறுகையில், "மலையாள திரைப்படம் ஒன்றில் நான் நடித்து கொண்டிருந்த போது... நான்கு பேர் ஒன்று கூடி ஏதோ தகாத வீடியோவை பார்த்து கொண்டிருந்தது தெரிந்தது. அங்கிருந்த தமிழ் ஆள் ஒருவரை அழைத்து அந்த நான்கு பேர் என்ன பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டேன். அதற்க்கு அவர்... அவர்கள் நடிகைகள் சிலர் கேரவனில் உடை மாற்றும் வீடியோவை பார்த்து தான் சிரித்து கொண்டிருக்கிறார்கள் என கூறினார் என்றார். பின்னர் ராதிகா கத்தி கூச்சலிட்டு... அந்த நான்கு பேரையும் தண்டித்ததாக கூறப்படுகிறது.
44
Mohan Lal
இந்த விவகாரம் குறித்து ராதிகாவிடம் கேரள போலீசார் விசாரணை நடத்த... போன் மூலம் கேட்டபோது அவர் எந்த நடிகரின் படப்பிடிப்பில் நடந்தது என்பதை சொல்ல மறுத்து விட்டதாக கூறப்பட்டது. எனினும் பல நடிகைகளிடம், இது போல் ரகசிய கேமரா இருக்கும் விஷயத்தை கூறி... விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக தெரிவித்தார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து... மலையாள நடிகர் மோகன் லால் தனக்கு போன் போட்டு விசாரித்ததாக தற்போது ராதிகா கூறியுள்ளார். நடந்த விஷயத்தை அவரிடம் கூற, உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.