தீபாவளி ரேஸில் விடாமுயற்சி? SKவுக்கு தலைவலி கொடுக்க வருகிறாரா தல? லேட்டஸ்ட் அப்டேட்!

Sivakarthikeyan : பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வருகின்ற தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

Thala ajith Vidaamuyarchi may clash with sivakarthikeyan amaran ans
Sivakarthikeyan

கடந்த 2017ம் ஆண்டு தமிழில் வெளியான பிரபல நடிகர் கௌதம் கார்த்திக்கின் "ரங்கூன்" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கோலிவுட் உலகில் களமிறங்கியவர் தான் ராஜ்குமார் பெரியசாமி. தனது முதல் திரைப்படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற அவர், அதன்பிறகு சுமார் 7 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு இப்போது பிரபல நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து "அமரன்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். 

இந்திய ராணுவத்தில் பணியாற்றி மறைந்த மேஜர் முகுந்தன் வரதராஜன் என்பவருடைய வாழ்க்கை வரலாறை கூறும் திரைப்படமாக இது அமைய உள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, ஒரு ராணுவ வீரராக இந்த திரைப்படத்தில் அவர் தோன்றியிருக்கிறார். பிரபல ராஜ்கமல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கும் நிலையில் வருகின்ற தீபாவளி திருநாளில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கற்பைக் காப்பாற்ற போராடிய விஜய் & சூர்யா - மிஸ்டர் க்ளீன்னு சர்டிபிகேட் கொடுக்கும் பாடகி சுச்சி!

Thala ajith Vidaamuyarchi may clash with sivakarthikeyan amaran ans
Sai Pallavi

இதற்கு முன்னதாகவும் பல ஆக்சன் திரைப்படங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தாலும், இந்த அமரன் திரைப்படம் அவருடைய திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு திரைப்படமாக மாறி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக அவர் நடித்திருப்பதால் அந்த கதாபாத்திரத்திற்காக பல பிரத்தியேகமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார், மேலும் தன்னுடைய உடல் வாகையும் முற்றிலுமாக மாற்றியுள்ளார் சிவா. 

இந்த அமரன் திரைப்படத்தில் பிரபல நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடிகராக மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் ஒரு தயாரிப்பாளராகவும் பல திரைப்படங்களை தொடர்ச்சியாக தயாரித்து வருகிறார். இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நடிகர் சூரியன் கொட்டுக்காளி என்ற திரைப்படத்தை அவர் தயாரித்து வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அமரன் படம் மட்டுமல்லாமல் மற்ற இரு படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.


Bloody Beggar

அமரன் திரைப்படம் தீபாவளி திருநாளுக்கு திரையரங்குகளில் வரவுள்ள அதே நேரம், இப்போது இளம் நாயகனாக உருவாகி வரும் பிரபல நடிகர் கவின் நடிப்பில் உருவாகி வரும் "ப்ளடி பெக்கர்" என்கின்ற திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை, அவருடன் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சிவ பாலன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், ஜென் மார்ட்டின் என்பவர் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில காலமாகவே நல்ல பல திரைப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வரும் நடிகர் கவின் நடிப்பில், இறுதியாக வெளியான "ஸ்டார்" திரைப்படம் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. ஏறக்குறைய அந்த திரைப்படத்தின் வெளியிட்டு தேதியும் தீபாவளியை ஒட்டியே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் சிவாவிற்கும் கவினுக்கும் கலக்கம் கொடுக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

Vidaamuyarchi

பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் தான் "விடாமுயற்சி". கிட்டத்தட்ட ஓராண்டு காலம் என்ற அளவை தாண்டி அந்த திரைப்படத்தின் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது அந்த திரைப்படத்திலிருந்து சில சில அப்டேட்டுகள் வெளிவந்தாலும், இன்னும் அந்த திரைப்படம் எப்போது வெளியாக உள்ளது என்கின்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கிடைக்கவில்லை. 

தல அஜித் "விடாமுயற்சி" திரைப்பட பணிகளை ஆரம்பித்து சுமார் 60% பணிகளை முடித்த பிறகு தான், ஆதிக் ரவிச்சந்திரனின் "குட் பேட் அக்லி" திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார். இப்போது அந்த திரைப்படமே சுமார் 50 சதவீத படபிடிப்பை முடித்துள்ள நிலையில், இன்னும் விடாமுயற்சி குறித்த அறிவிப்புகள் வெளியாகாமல் உள்ளது. ஆனால் இந்த சூழலில் தான் தற்பொழுது கிடைத்துள்ள சில தரவுகளின்படி, வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி திருநாள் அன்று "விடாமுயற்சி" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

'லியோ' வசூலை நெருங்க கூட முடியல... திணறும் தளபதியின் 'கோட்'! அதிகார பூர்வ வசூலை வெளியிட்ட படக்குழு!

Latest Videos

click me!