Jayam Ravi Parents
தமிழ் திரையுலகில் எடிட்டராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் மோகன். இவரது மகன்களான மோகன் ராஜா, ஜெயம் ரவி ஆகியோர் தான் தற்போது கோலிவுட்டில் இயக்குனராகவும், நடிகராகவும் கலக்கி வருகின்றனர். மோகன் ராஜா - ஜெயம் ரவி காம்போவில் வெளிவந்த ஜெயம், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தனி ஒருவன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கின்றனர்.
ஜெயம் ரவியின் தந்தை மோகன் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான எடிட்டராக வலம் வந்தது பலருக்கும் தெரியும். ஆனால் அவரது காதல் திருமணம் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Jayam Ravi Family
ஜெயம் ரவியின் தந்தை மோகன் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ஜின்னா. இவர் சிறுவயதில் இருந்தே நடிகர் தங்கவேலு என்பவர் வீட்டில் தான் வளர்ந்து வந்தாராம்.
நடிகர் தங்கவேலுவுக்கு குழந்தை இல்லாததால் அவர் ஜின்னாவை குழந்தையாக தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கிறார். தங்கவேலு இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் தான் ஜின்னா என்கிற பெயரை மோகனாக மாற்றி இருக்கிறார். தங்கவேல் மூலம் தான் சினிமாவில் எடிட்டிங்கை கற்றிருக்கிறார் மோகன். அதன்பின்னர் சென்னைக்கு வந்தபோது வரலட்சுமி உடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்... தலைவருக்கே தண்ணிகாட்டிய தளபதி... பாக்ஸ் ஆபிஸில் கோட் படைத்த புது சாதனை
Editor Mohan Family
1972-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அந்த காலத்தில் சாதி விட்டு சாதி திருமணம் செய்வதெல்லாம் நடக்காத காரியமாக இருந்த நிலையில், அப்போதே மதம் விட்டு மதம் திருமணம் செய்துகொண்டனர். இஸ்லாமியரான மோகன், பிராமின் வீட்டு பெண்ணான வரலட்சுமியை காதலித்து கரம்பிடித்துள்ளார். அதுவும் ஒன்றல்ல மூன்று முறை தன் மனைவியை திருமணம் செய்திருக்கிறார் மோகன். இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய முறைப்படி தன் மனைவியை திருமணம் செய்தாராம் மோகன்.
Jayam Ravi Father Love Story
இதுபற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள ஜெயம் ரவியின் தந்தை மோகன், நாங்கள் மதம் விட்டு மதம் கல்யாணம் செய்துகொள்ளவில்லை, மனம் விட்டு மனம் தான் கல்யாணம் செய்துகொண்டோம் என அழகாக கூறி இருக்கிறார்.
கல்யாணம் ஆன புதிதில் 45 ரூபாய் வாடகைக்கு கூட யாரும் வீடு தரவில்லை என கூறிய மோகன், குடிசையில் தான் தங்களது வாழ்க்கையை தொடங்கினாராம். ஜெயம் ரவியின் தாயார் நன்கு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவரை காதல் திருமணம் செய்துகொண்ட மோகன், பின்னர் 3 குழந்தைகள் பெற்றெடுத்த பின்னர் தன்னுடைய மனைவியை படிக்க வைத்திருக்கிறார். திருப்பதி வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகத்தில் எம்.இ படித்திருக்கிறார் வரலட்சுமி.
இதையும் படியுங்கள்... ஜெயிலருக்கே ஜெயிலா! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இத்தனை முறை கைதாகி இருக்கிறாரா?