
நடிகை ராதிகா ஹேமா கமிட்டி விவகாரத்தில் கேரவன் விஷயத்தை கூறியது... பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ள இந்நிலையில், ராதிகா பற்றிய தகவல்கள் மீண்டும் யூடியூப் பக்கங்களில் பேசி வருகிறார்கள் சில பத்திரிகையாளர்கள். அந்த வகையில், பிரபல மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன், நடிகை ராதிகா 60-களிலேயே கேரவனில் கேமரா இருந்ததாக கூறியது பற்றி பேசியுள்ளார், இதுகுறித்து கூறுகையில் "1960 களில் கேரள சினிமாவில் கேரவன் பயன்படுத்தும் கலாச்சாரமே இல்லை. தமிழ்நாட்டில்தான் இந்த கேரவன் கலாச்சாரங்கள் எல்லாம் இருந்தது. ஆனால் கேரளாவில் அப்படி எதுவும் இல்லை. அதே போல் ராதிகா பிறந்ததே... 1960களில் தான் எனவே எப்படி அவர் 1960 களில் கேரவனில் கேமரா இருந்தது என கூறியிருப்பார்? இவர் இப்படி கூறியது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு கருத்து என்றும் உடைத்து பேசியுள்ளார்.
பின்னர் ராதிகா குடும்பம் குறித்து பேசிய பத்திரிகையாளர் பாண்டியன், எம் ஆர் ராதாவுக்கு பல மனைவிகள் உள்ளனர். அவர்களில் ஒரு மனைவி தான் கீதா. இலங்கையில் சிங்கள மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தவர் தான் கீதா. இவருக்கும் - எம்.ஆர்.ராதாவுக்கும் ராதிகா, நிரோஷா மற்றும் ராம் மோகன் என மூன்று குழந்தைகள் பிறந்தனர். தமிழகத்தில் தன்னுடைய பள்ளி படிப்பை படித்து வந்த ராதிகா, பின்னர் எம்ஜிஆர், தந்தை எம் ஆர் ராதாவால் சுடப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், தங்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் இல்லை என எண்ணி மீண்டும் இலங்கைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ராதிகா தன்னுடைய படிப்புக்காக லண்டன் சென்றார். அங்கு தான் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு தமிழகம் வந்தார்.
6 வருட தவம்... குழந்தையை மார்போடு அணைத்தபடி தீபிகா படுகோன்! வைரலாகும் போட்டோ!
ராதிகா குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்து வசித்து வந்த சமயத்தில் தான், இயக்குனர் பாரதிராஜா தான் இயக்க இருந்த 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தில் நடிக்க வைக்க, ஒரு கிராமத்து முகவெட்டு கொண்ட கதாநாயகியை தேடிக் கொண்டிருந்தார். தன்னுடைய நண்பர் வீட்டிற்கு ஒருமுறை சென்றபோது... ராதிகாவின் புகைப்படத்தை பார்க்க நேரிட்டது. இந்த பெண் யார் என நண்பரிடம் விசாரிக்க.. எம் ஆர் ராதா மகள் என்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் MR ராதாவிடம் ஒருவித தயக்கத்துடன் உங்கள் மகளை சினிமாவில் நடிக்க வைபீர்களா என கேட்டுள்ளார், MR ராதாவும் சினிமாவில் தானே தாராளமாக நடிக்கட்டும் என கூறினாராம்.
இந்த படத்தில், இயக்குனர் பாரதிராஜாவுக்கு துணை இயக்குனராக பணியாற்றிய பாக்யராஜுக்கு ராதிகாவை இந்த படத்தில் நடிக்க வைப்பதில் துளியும் விருப்பம் இல்லை. இந்த பொண்ணு பார்க்க பூசணிக்காய் மாதிரி இருக்கு. இந்த பூசணிக்காய் தமிழ் கலாச்சாரத்துக்கு ஒத்து வராது. தமிழே தெரியல... படித்ததெல்லாம் இங்கிலீஷ் மீடியம். வசனத்தையும் இவரால் பேச முடியாது என கூறியுள்ளார். ஆனால் பாரதிராஜா என்ன ஆனாலும் இவர் தான் கதாநாயகி என முடிவு செய்துவிட்டதாக தெரிவிக்க, ராதிகாவை வைத்தே படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
ராதிகா தேனி ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கும் முதல் ஷார்ட் எடுக்கப்பட்டபோது, பாக்யராஜ் ராதிகாவை வேண்டா வெறுப்புக்கு என்று தான் கொண்டு போய் நிறுத்தியுள்ளார். பாக்யராஜ் வசனத்தை சொல்லிக் கொடுத்தவுடன், அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு பேசி அசத்தியுள்ளார். மேலும் அன்று முதல் இன்று வரை ராதிகாவை பொருத்தவரை எதையும் படித்து பார்த்து வசனம் பேசுபவர் கிடையாது. தன்னுடைய அசிஸ்டன்ட்டையோ, அல்லது துணை இயக்குனரையோ ஒரு முறை டயலாக்கை படிக்க சொல்லிவிட்டு அதை அப்படியே உள்வாங்கி எத்தனை பக்கமாக இருந்தாலும் பேசி விடுவார். இது அவருடைய அப்பா எம் ஆர் ராதாவிடம் இருந்து வந்ததுதான். காரணம் அவருக்கும் அப்பாவுக்கு பெரிதாக எழுத, படிக்க தெரியாது. ஆனால் எவ்வளவு பெரிய டயலாக்கையும் உள்வாங்கி கொண்டு பேசுவார்.
ராதிகாவின் முதல் படமான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படு பிஸியான நடிகையாக மாறினார் ராதிகா. தன்னை பூசணிக்காய் என கூறிய இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த தாவணி கனவுகள் படத்திலேயே நடித்து அசத்தினார். முன்னணி நடிகையாக மாறிய பின்னர் மலையாள திரைப்பட இயக்குனர், நடிகர், மற்றும் தயாரிப்பாளருமான பிரதாப் போத்தனுடன் ராதிகாவுக்கு காதல் மலர இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் பிரதாப் போத்தனுடன் இணைந்து ராதிகா 'மீண்டும் ஒரு காதல் கதை' என்கிற படத்தை இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார். இந்த படம் தேசிய விருதை வாங்கி கொடுத்தது. இந்த படம் கேரளாவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. ஆனால் பிரதாப் போதன்னுடனான திருமண வாழ்க்கை 2 வருடமே நீடித்த நிலையில், பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பிரதாப் போத்தனுடனான விவாகரத்துக்கு பின்னர் ராதிகா - விஜயகாந்த் சேர்ந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தனர். அணைத்து படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. அந்த சமயத்தில் தான் ராதிகா - வியாஜயகாந்த் காதல் விவகாரமும் கோலிவுட் திரையுலகில் பற்றி கொண்டு எறிந்துள்ளது. விஜயகாந்த், ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்த நிலையில்... விஜயகாந்தின் நண்பர் ராவுத்தர் அதற்க்கு தடையாக நின்றார். ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்வது வாழ்க்கைக்கு செட் ஆகாது குடும்ப பெண்ணாக பார்த்து திருமணம் செய்து கொள் என கூறி.... பிரேமலதா விஜயகாந்த் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.
ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி உண்மையிலேயே மைசூர் மகாராஜா பேத்தியா?
இதனால் விஜயகாந்த் தான் தன்னுடைய வாழ்க்கை என இருந்த நடிகை ராதிகாவின் காதல் தோல்வியில் முடிந்தது. மேலும் விஜயகாந்த் பலருக்கு பணம் கொடுத்து, உதவி இருந்தாலும்... ராதிகா தான் விஜயகாந்துக்கு பணம் கொடுத்து உதவியவர். பட தயாரிப்பில் நஷ்டமடைந்த விஜயகாந்துக்கு ராதிகா அந்த காலத்திலேயே 4 கோடிக்கு மேல் பணம் கொடுத்து உதவினார் கடைசியில் விஜயகாந்த் ராதிகாவை வாழ்க்கையிலும் ஏமாற்றி விட்டார். பண விஷயத்திலும் ஏமாற்றி விட்டார் என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து லண்டன் சென்ற ராதிகா, வெளிநாட்டை சேர்ந்த பணக்கார நபரான... Richard Hardy என்பவரை திருமணம் செய்து கொண்டு அவர் மூலம் ரேயான் என்கிற மகளை பெற்றெடுத்தார். ஆனால் இந்த திருமண வாழ்க்கையும் இரண்டே வருடத்தில் முடிவுக்கு வந்தது. மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுத்த போது அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிய ராதிகா, சன் டிவிக்கு சில நிகழ்ச்சிகளையும் தயாரித்தார். ஏற்கனவே சரத்குமார் ராதிகாவுக்கு நன்கு தெரிந்தவர் என்றாலும்... கோடீஸ்வரன் நிகழ்ச்சியை சரத் தொகுத்து வழங்கியபோது ராதிகாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் எகிற மகன் ஒருவரும் உள்ள நிலையில், ஒற்றுமையான ஜோடிகளாக வாழ்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் படமே ஹிட்... 'ஜெயம்' முதல் 'சைரன்' வரை! ஜெயம் ரவி நடித்த வெற்றிப்படங்கள் இத்தனையா?