கடந்த மூன்று வாரமாகவே, ஆதிரையின் திருமணம் குறித்த காட்சிகள் ரசிகர்களை சற்று சலிப்பு தட்ட வைத்த நிலையில், ஒரு வழியாக கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஆதிரையின் அதிர்ச்சி திருமணம் அரங்கேறியது. ரசிகர்கள் அனைவரும் ஆதிரையை அருண் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறி வந்த நிலையில், குணசேகரனின் ஆசைப்படி கரிகாலனுக்கும், ஆதிரைக்கும் திருமணம் நடுரோட்டிலேயே முடிந்தது.
இதுநாள் வரை குணசேகரன், என்ன சொன்னாலும்... செய்தாலும் அடங்கி போன ரேணுகா, ஈஸ்வரி, மற்றும் நந்தி ஆகியோர் தற்போது அவரை எதிர்க்க துவங்கி விட்டனர். தன்னுடைய கணவர் சம்பாதித்யம் இல்லாத போது... தன்னுடைய மகள் அரசு பள்ளியில் படிக்கட்டும் என ரேணுகா முடிவெடுத்து அதனை செயல் படுத்தவும் துணிந்து விட்டார். ஆனால் குணசேகரன், தன் வீட்டு பிள்ளை அரசு பள்ளியில் படித்தால் எனக்கு தான் அசிங்கம் அதுக்கு அவ பள்ளிக்கு போகாம இருந்தால் கூட பரவாயில்லை என கூறுகிறார்.
இதை தொடர்ந்து, ஜீவானந்தம் பற்றி விசாரிக்க துவங்கி விட்டனர் சக்தி மற்றும் ஜனனி. இருவரும் கௌதமை பார்க்க நேரிட, அவரிடம் அப்பத்தா கண் முழிக்கும் போதெல்லாம் ஜீவானந்தம் என்கிற பெயரை கூறுகிறார் என கூறுகிறார்கள்... ஜீவானந்தம் என்கிற பெயரை கேட்டதுமே கௌதமுக்கு தேள் கொட்டியது ஆகிறது. ஜீவானந்தம் அப்பத்தாவின் 40% ஷேரும் தன்னுடைய பேருக்கு மாற வேண்டும், என்று கூறி அந்த பொறுப்பை கௌதமிடம் தான் ஒப்படைத்துள்ளார்... எனவே அடுத்து கெளதம் என்ன செய்ய போகிறார் என்பது எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. தோழிக்காக ஜீவானந்தத்தை கௌதம் காட்டிக் கொடுப்பாரா? அல்லது தன்னுடைய கொள்கை தான் முக்கியம் என தோழி ஜனனியை பழிவாங்குவாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும் அதே போல் ஜனனி மற்றும் சக்தியின் கேள்விகளுக்கு கௌதம் என்ன பதில் சொல்வார் என்பதும் இன்று தெரியவரும்.