நெப்போலியன் முதல் அரவிந்த்சாமி வரை... சொந்தமாக ஐடி கம்பெனி நடத்தி பல கோடி சம்பாதிக்கும் சினிமா பிரபலங்கள்

First Published | Jul 10, 2023, 3:17 PM IST

சினிமாவில் நடித்து பிரபலமான நடிகர், நடிகைகள் சிலர் சொந்தமாக ஐடி கம்பெனி நடத்தி அதன் மூலம் கோடி கோடியாய் சம்பாதித்தும் வருகிறார்கள். அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நெப்போலியன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவர் தமிழில் புது நெல்லு புது நாத்து, சீவலப்பேரி பாண்டி, ஐயா, தசாவதாரம், போக்கிரி என ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு சென்று செட்டில் ஆன நெப்போலியன், அங்கு ஜீவன் டெக்னாலஜி என்கிற ஐடி நிறுவனத்தை நடத்தி அதன்மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பும் கொடுத்துள்ளார். அதன்மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் வருமானமும் வருகிறது.

டாப்ஸி

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, பின்னர் அஜித்தின் ஆரம்பம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 மற்றும் கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் டாப்ஸி. தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்ஸி தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறாராம்.

இதையும் படியுங்கள்... மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீள... இவ்ளோ ஆபத்தான சிகிச்சையை மேற்கொள்கிறாரா சமந்தா?


சோனு சூட்

பாலிவுட்டில் வில்லன் நடிகராக வலம் வந்த சோனு சூட், கொரோனா காலகட்டத்தில் பல்வேறு உதவிகளை செய்ததன் மூலம் மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக மாறிய சோனு சூட்டும் சொந்தமாக ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன்மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் அவர் உதவி இருக்கின்றார். அந்நிறுவனம் மூலம் அவருக்கு நன்கு வருமானமும் கிடைத்து வருகிறதாம்.

அரவிந்த் சாமி

தமிழில் நாயகனாக அறிமுகமாகி தற்போது வில்லனாக மிரட்டி வருபவர் தான் அரவிந்த் சாமி. தனி ஒருவன், போகன், செக்கச் சிவந்த வானம் என இவர் வில்லனாக நடித்த திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி பெற்றன. இவர் சொந்தமாக ஐடி கம்பெனி நடத்தி வருகிறார். டேலண்ட் மேக்ஸிமம் என்கிற அந்நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார் அரவிந்த் சாமி.

இதையும் படியுங்கள்... சொன்னபடி செய்த அசீம்... பிக்பாஸ் மூலம் கிடைத்த பணத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்கு வழங்கினார்

Latest Videos

click me!