முசாஃபிர் கஃபே (Musafir Cafe)
ஜூலை 24 முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'முசாஃபிர் கஃபே' ஹிந்தி வெப் சீரிஸ், ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் மஹிமா மக்வானா நடித்துள்ள இந்த தொடரில், அமைதியான வாழ்க்கை வாழும் மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கையில் இரண்டு பெண்கள் நுழைந்த பிறகு ஏற்படும் உறவு சிக்கல்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான மாற்றங்களே கதையாக சொல்லப்படுகிறது.
ரான்சம் கேன்யன் – சீசன் 2 (Ransom Canyon Season 2)
ஜூலை 23 முதல் நெட்ஃபிளிக்ஸ்-ல் ஸ்ட்ரீமிங் ஆகும் 'ரான்சம் கேன்யன்' சீசன் 2, டெக்சாஸில் வாழும் மூன்று பண்ணை குடும்பங்களின் அரசியல், குடும்ப உறவுகள் மற்றும் அதிகார மோதல்களை மையமாகக் கொண்ட ஹாலிவுட் டிராமா. இந்த புதிய சீசனில் மேலும் பல எதிர்பாராத திருப்பங்கள் இடம்பெறுகின்றன.
72 ஹவர்ஸ் (72 Hours)
ஜூலை 24 முதல் நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாகும் '72 ஹவர்ஸ்' திரைப்படத்தில், கெவின் ஹார்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது தொழில் வாழ்க்கையை காப்பாற்ற முயலும் நடுத்தர வயது அதிகாரி ஒருவர், இளைஞர்களுடன் மூன்று நாள் பேச்சிலர் பார்ட்டியில் கலந்து கொள்ளும் சூழ்நிலையை நகைச்சுவையாக படமாக்கியுள்ளனர்.
தி டெட் கலெக்டர் (The Debt Collector)
ஜூலை 23 முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'தி டெட் கலெக்டர்' தாய்லாந்து ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் கடன் வசூலிப்பாளர் ஒருவர் பழிவாங்க மீண்டும் குற்ற உலகில் களமிறங்கும் கதையைச் சொல்கிறது.