Jana Nayagan Worldwide Box Office : எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆகி 2 நாட்கள் ஆகும் நிலையில், அதன் வசூல் நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பல பிரச்சனைகளுக்குப் பிறகு, விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. நடிகர் விஜய், முதலமைச்சரான பிறகு வெளியாகும் முதல் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தங்களது தலைவன் விஜய்யை கடைசி முறையாக தியேட்டரில் பார்க்க, பல ரசிகர்கள் வேலைக்குக் கூட லீவு போட்டுவிட்டு வந்திருந்தனர். வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் 'ஜனநாயகன்' படத்தை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகிறார்கள். டைட்டில் கார்டில் இருந்து எண்ட் கார்டு வரை, ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரை அதிர வைத்தது.
படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ஒவ்வொரு ரசிகரும், ஒரு பக்கம் சந்தோஷத்துடனும், மறுபக்கம் இதுதான் விஜய்யின் கடைசிப் படம் என்ற சோகத்துடனும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களை வெளிப்படுத்தினர். வேலை நாளாக இருந்தபோதிலும், காட்சிகள் ஹவுஸ்ஃபுல் மற்றும் ஃபாஸ்ட் ஃபில்லிங்கில் உள்ளன. இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே இணையத்தில் லீக் ஆகிவிட்டது. தற்போது கோலிவுட்டே வியந்து பார்க்கும் விஷயம் என்னவென்றால், ஒரு லீக் ஆன படத்துக்கு இம்புட்டு ரெஸ்பான்ஸா என்பது. இதெல்லாம் தளபதியால் மட்டுமே சாத்தியம் என சிலாகித்து கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.
எச். வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. தரமான படங்களைத் தயாரிக்கும் வெங்கட் கே. நாராயணா, தனது கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஆக இருந்தாலும் அதில் நிறைய மாற்றங்களை செய்து, விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்து படைத்திருக்கிறார் எச்.வினோத்.
ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் உலகளவில் ரூ.80 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. இரண்டாம் நாளான நேற்று இப்படத்தின் வசூல் சரிவை சந்தித்து இருந்தாலும், வேலை நாளில் இவ்வளவு பெரிய கலெக்ஷன் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி இப்படம் நேற்று இந்தியாவில் மட்டும் ரூ.21.15 கோடி வசூலித்துள்ளது. இதுதவிர வெளிநாடுகளில் ரூ.10 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இரண்டு நாட்கள் முடிவில் ஒட்டுமொத்தமாக உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் ரூ.112.50 கோடி வசூலித்துள்ளதாக சாக்னில்க் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜனநாயகன் படத்தின் வசூல் வேட்டை வார நாட்களிலேயே படு ஜோராக இருந்து வந்த நிலையில், இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் அப்படத்தின் வசூல் டாப் கியரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் வார இறுதியில் இப்படம் ரூ.250 கோடி வசூலை தாண்டிவிடும் என பரவலாக பேசப்படுகிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.