ஒரு சாதாரண ஆளா அவர் இருந்தாகூட இவ்வளவு விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. சினிமா துறையில் அவரை சாமினு கூப்பிடுவாங்க. அவருக்கு சாமியார்னு பெயர் உண்டு. ரஜினி சாரே அவரை சாமினு தான் கூப்பிடுவாரு. ஏன்னா அந்த அளவுக்கு ஆன்மீகத்திற்குள் நுழைந்து நிறைய விஷயங்கள் பேசுபவர் அவர். ஆன்மீகத்திற்குள் போகப் போக பெருந்தன்மையும், முதிர்ச்சியும், சகிப்புத்தன்மையும், புரிதலும் வந்தால் தானே அது ஆன்மீகம். இவர் ஆன்மீகத்துக்கு உள்ள போறேன்னு சொல்லிட்டு, வெளிய அசிங்கமா பேச ஆரம்பிச்சாரு.
உதாரணத்திற்கு, சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஏசு கிறிஸ்து வாழ்ந்தாரா, வந்தாரா, உயிர்த்தெழுந்தாரா என்பது எனக்கு தெரியாதுனு சொல்லியுள்ளார் இளையராஜா. இது அவருக்கு தேவையா. ரமண மகரிஷி ஒருவர் தான் செத்து உயிர்த்தெழுந்தவர் என்பதை தான் சொல்லவருகிறாராம். கொஞ்சமாது ஆன்மீக புரிதல் உள்ளவனாக இருந்திருந்தால், இப்படி பேசி இருப்பாரா.