இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான தேசப்பற்று திரைப்படம் 'ஆர் ஆர் ஆர்'. இப்படத்தில் கொமரம் பீம் என்கிற சுதந்திரப் போராட்ட வீரராக நடித்திருந்தவர் ஜூனியர் என்டிஆர். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடனமாடிய பாடலான 'நாட்டு நாட்டு' பாடல் உலக அளவில் பிரபலமாகியது. மேலும் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஆஸ்கர் விருதையும் பெற்றது.
'ஆர் ஆர் ஆர்' படத்தின் வெற்றிக்குப் பின்னர் ஜூனியர் என்டிஆர் தன்னுடைய 30-வது படத்தை பிரபல இயக்குனர் கொரட்டல சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளது உறுதியானது. இப்படத்தில் ஜூனியர் என் டி-ஆருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளுமான ஜான்வி கபூர் நடிக்க உள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஜூனியர் என்டிஆர்-யின் 31 வது படத்தை இயக்க உள்ள, கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இப்படத்தின் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தற்போது இந்த படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தின் பூஜையில் நடிகை ஜான்வி கபூர் பச்சை நிற பட்டுப் புடவையில், அதற்கு மேட்சிங் ஆக ஸ்லீவ் பிளஸ் ஜாக்கெட் அணிந்து ஜிமிக்கி கம்மலுடன் பேரழகியாக வந்திருந்தார்.