தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் அறிமுகமான இவர் இதையடுத்து குள்ளநரி கூட்டம், ஜீவா, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், எஃப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி என தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.