படையப்பா படத்தின் 26 ஆண்டுகள் நிறைவு - நீலாம்பரியின் புதிய துவக்கம் ரம்யா கிருஷ்ணன் போட்டோ வைரல்!

Published : Apr 12, 2025, 12:13 PM ISTUpdated : Apr 12, 2025, 12:24 PM IST

'படையப்பா' வெளியாகி 26 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் ரஜினிகாந்துடன்  'ஜெயிலர் 2' படத்தில் இணைந்துள்ளதாக நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.  

PREV
15
படையப்பா படத்தின் 26 ஆண்டுகள் நிறைவு - நீலாம்பரியின் புதிய துவக்கம் ரம்யா கிருஷ்ணன் போட்டோ வைரல்!
26 Years of Padaiyappa

'படையப்பா' படம், வெளியாகி 26 ஆண்டுகள்:

ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸ் ஆன 'படையப்பா' படம், வெளியாகி கடந்த 10ஆம் தேதியுடன் 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 'படையப்பா' படம் தான் ரம்யா கிருஷ்ணனுக்கு நீலம்பரி என்ற மறக்க முடியாத அடையாளத்தை கொடுத்தது. அது மட்டுமின்றி ரம்யா கிருஷ்ணன் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது. 

25
Ramya Krishnan Pair With Jailer

24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன்:

படையப்பா படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லியாக நடிப்பில் மிரட்டி இருந்தார் ரம்யா கிருஷ்ணன். இதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு, அதாவது சுமார் 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் இவர் இணைந்து நடித்த திரைப்படம் தான் 'ஜெயிலர்' .  நெல்சன் திலீப் குமார் இயக்கிய இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு, தற்போது ஜெயிலர் படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. 

Jailer 2: ஜெயிலர் 2 படத்தில் இவரா? பயங்கரமான ஆளாச்சே - வெளியான வேற லெவல் அப்டேட்!
 

35
Jailer 2 Promo

ஜெயிலர் 2 படத்தின் புரோமோ:

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே ஜெயிலர் 2 படத்தின் புரோமோ வீடியோவை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பை படக்குழு தொடங்கியுள்ளது. 

45
Jailer 2 Shooting:

'ஜெயிலர் 2 ' மற்றும் படையப்பா

இதில், இணைந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் 'ஜெயிலர் 2 ' மற்றும் படையப்பா படம் குறித்த முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், படையப்பாவின் 26 ஆண்டுகள் நிறைவு மற்றும் ஜெயிலர் 2 படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு என்று பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது 'ஜெயிலர் 2' கேரளா மாநிலம் அட்டபாடி பகுதியில் நேற்று 11ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பணம் கொடுத்தால் ரஜினி மனைவியாக நடிக்கலாம்; மோசடியில் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன நடிகை

55
Ramya Krishnan Character:

ஜெயிலர் 2 படத்தில் ரம்யா கிருஷ்ணன்:

ஜெயிலர் 2 படத்தில், ரம்யா கிருஷ்ணன் விஜயா பாண்டியன் (விஜி) என்ற கதாபாத்திரத்தில் இவர் நடிக்க, டைகர்  முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த நடித்து வருகிறார் (Ramya Krishnan is back with Padayappa in the shooting of Jailer 2). மேலும்  மிர்ணா மேனன், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு ஆகியோர் பலர் நடிக்கின்றனர். மிர்ணா மேனன் மற்றும் எஸ் ஜே சூர்யா தொடர்பான காட்சிகளும் இப்போது கேரளாவில் படாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories