தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமலும், சமூக வலைதளங்கள் பக்கம் தலைகாட்டாமலும் இருந்து வந்தார். அவர் உடல்நிலை சரியில்லாததன் காரணமாகத் தான் இவ்வாறு இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.