அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இப்படம் நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு போட்டியாக ரிலீசாக உள்ளது. இதனால் வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கி உள்ளது.
24
துணிவு படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த மாதம் வெளியானது. ரிலீசுக்கு 2 மாதங்கள் உள்ள போதிலும் வாரிசு மற்றும் துணிவு படங்களின் பிசினஸ் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளன. குறிப்பாக வாரிசு படம் ரிலீசுக்கு முன்பே ரூ.280 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
மறுபுறம் துணிவு படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் சிறப்பாக நடைபெற்று வந்தாலும், இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை 17 கோடிக்கு மட்டுமே விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. வாரிசு படத்தோடு ஒப்பிடுகையில் இது 50 சதவீதம் கூட இல்லையாம்.
44
அஜித் படத்திற்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட காரணம், அவர் நடிப்பில் இதற்கு முன் ரிலீசான படங்கள் வெளிநாட்டில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாதது தான் என கூறப்படுகிறது. இதனால் தான் துணிவு படத்தின் பிசினஸ் வெளிநாட்டில் மந்தமடைந்து காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி நடிகர் அஜித்தும் நல்ல படத்துக்கு புரமோஷன் தேவையில்லை என சொல்லி புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டேன் என சொன்னதும் இப்படத்தின் பிசினஸ் பாதிக்கப்படுவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் பொங்கல் ரேஸில் வாரிசு தான் டாப்பில் உள்ளதுபோல் தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.