நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு இரண்டு முறை வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்று வந்த இந்த ஜோடி, கடந்த சில தினங்களுக்கு துபாய்க்கு சென்று வந்தனர். அதுவும் குடும்பத்தினரோடு. விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காகத் தான் குடும்பத்தினரோடு துபாய் சென்று வந்துள்ளது விக்கி - நயன் ஜோடி.
துபாய் பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களை வரிசையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார் விக்னேஷ் சிவன். அதில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் குழந்தைகளோடு விளையாடியபோது எடுத்த புகைப்படமும் இடம்பெற்று இருந்தது. அந்த புகைப்படத்தில் ‘குழந்தைகள் நேரம், எதிர்காலத்திற்காக பயிற்சி எடுக்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார் விக்கி.
அவரின் இந்த பதிவு ரசிகர்களை சற்று குழப்பமடைய செய்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஒருவேளை நயன்தாரா கர்ப்பமாக இருப்பதை தான் இப்படி சூசகமாக சொல்கிறாரா விக்கி என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தற்போது சினிமாவில் படு பிசியாக உள்ளனர். நயன் இந்தியில் உருவாகும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதேபோல் விக்னேஷ் சிவன், அடுத்ததாக அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஜவான் கூட்டணியில் இணைந்தார் விஜய்... அட்லீ, ஷாருக்கான் உடன் தளபதி எடுத்துக்கொண்ட மெர்சல் போட்டோஸ் இதோ