நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து விஜய், விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற கீர்த்தி சுரேஷ், தெலுங்கி வெளியான மகாநடி படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்று அசத்தினார். அவரின் கெரியரில் அப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.