தளபதி விஜய் தற்போது, தன்னை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கிய, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் இணைந்து நடித்து முடித்துள்ள திரைப்படம் 'லியோ'. இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் போஸ் புரோடக்ஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.
'லியோ' படத்தை தொடர்ந்து, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68 ஆவது படத்தை விஜய் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் அரசியல் கதைகளத்தோடு உருவாவதாக கூறப்படுகிறது.
இப்படி விஜய் மாஸ்டர் பிளான் போட்டு தான் அரசியல் களத்தில் இறங்க உள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் மூன்று வருடங்கள் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என கூறப்படுவது திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பரிசுகளை கொடுப்பதாலோ, தலைவர்கள் பிறந்தநாளை அனுசரிப்பதாலோ, பிறந்தநாளில் ரசிகர்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்வதால் மட்டுமே அரசியலில் இறங்கி வெற்றி பெற முடியாது, தீவிர அரசியலில் களப்பணிகளில் இறங்க வேண்டும்... என பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே திரைப்பட பணிகள் அனைத்தையும் துறந்து தீவிர அரசியலில் விஜய் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபாஸின் 'சலார்' டீசர் ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!