robo shankar, Dhanush
சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் ரோபோ சங்கர். இவர் தற்போது சினிமாவில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். ரோபோ சங்கர் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரது உடல் தான். குண்டான தோற்றத்துடன் இருக்கும் அவர், அதை வைத்தே பல்வேறு காமெடிகளையும் செய்திருக்கிறார். அப்படி அமுல் பேபி போல் இருந்த ரோபோ சங்கர், அண்மையில் சட்டென உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போனார்.
robo shankar, Dhanush
அவரின் இந்த நிலைமைக்கு அவரிடம் இருந்த குடிப்பழக்கம் தான் காரணம் என பின்னர் தெரியவந்தது. மஞ்சள் காமாலை நோயால் 4 மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்து படாத பாடு பட்டதாகவும், ஒரு கட்டத்தில் குடிக்க முடியாததால், தற்கொலைக்கு முயன்றதாகவும் அதிர்ச்சி தகவல்களை ரோபோ சங்கர் வெளியிட்டு இருந்தார். தற்போது குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்த ரோபோ சங்கர், உடல்நலம் தேறி மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி உள்ளார்.
இதையும் படியுங்கள்... திமுகவிலும் சாதி பாகுபாடு... பா.இரஞ்சித் குற்றச்சாட்டுக்கு பதறிப்போய் விளக்கம் அளித்த உதயநிதி ஸ்டாலின்
robo shankar
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வரும் ரோபோ சங்கர், அண்மையில் பாட்னர் என்கிற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் நடிகை ஹன்சிகாவின் காலை தடவும் படியான காட்சியில் நடிக்க முடியாமல் போனது வருத்தமாக இருந்ததாக கூறி மிகவும் கொச்சையாக பேசி இருந்தார் ரோபோ. இதைப்பார்த்து கொந்தளித்த பத்திரிகையாளர் ஒருவர், இதுமாதிரி கீழ்தரமாக பேசுபவர்களை மேடை ஏற்றாதீர்கள் எனக்கூறி தன் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
robo shankar, Dhanush
அந்த சர்ச்சை முடியும் முன் தற்போது தனுஷ் பற்றி பேசி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார் ரோபோ, அதன்படி நடிகர் தனுஷுக்கும் குடிப்பழக்கம் இருந்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மாரி படத்தில் தனுஷுடன் நடித்திருந்த ரோபோ சங்கர், அந்த சமயத்தில் தனுஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், ஆனால் சுதாரித்துக்கொண்டு அவர் ஒரு கட்டத்தில் அதில் இருந்து மீண்டு வந்துவிட்டதாக கூறினார். எனக்கு இருந்த அதே கெட்ட பழக்கம் தனுஷுக்கும் இருந்தது என ரோபோ சங்கர் சுட்டிக்காட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... 'புஷ்பா 2' படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் யார் இயக்கத்தில் நடிக்கிறார் தெரியுமா?