தமிழ் சினிமாவில், பல பிரபலங்கள் பொறாமை படும் அளவிற்கு, நட்சத்திர ஜோடிகளாக வாழ்ந்து வரும் சூர்யா - ஜோதிகா இருவரும் தற்போது தங்களின் பிள்ளைகளுடன் வெகேஷனுக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்.
குடும்பத்துடன் இவர்கள் வெகேஷனுக்கு செல்லும் போது எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. அந்த வகையில் தற்போது, சூர்யா - ஜோதிகா இருவரும் தங்கள் குழந்தைகளுடன் வெகேஷன் சென்றுள்ளது மட்டும் இன்றி, மகன் தேவ் பிறந்தநாளையும் அங்கு தண்ணீருக்கு நடுவே கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
சூர்யா - ஜோதிகா இருவருமே, சென்னையில் இருந்து மும்பையில் குடியேறி விட்டதால், தங்களின் பிள்ளைகளையும் அங்குள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் தான் படிக்க வைத்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து, சூரியாவும் ஜோதிகாவும் திரைப்பட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஜோதிகா பல வருடங்களுக்கு பின்னர், ஒரு ஹிந்தி படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.