maamannan
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டு வரும் படம் மாமன்னன் தான். உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான இதை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தின் ரிலீசுக்கு முன்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் தேவர் மகன் படத்தை கமல் முன்னிலையில் விமர்சித்து பேசியது மிகப்பெரிய அளவில் பேசுபொருள் ஆனது. இதனால் சமூக வலைதளங்களில் இயக்குனர் மாரி செல்வராஜை மீம் போட்டு கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர்.
maamannan
ஆனால் இப்படம் ரிலீஸ் ஆன பின்னர் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதோடு, இது முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வடிவேலுவின் கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாத படமாக உருவாகி இருக்கும் மாமன்னன் மிகப்பெரிய அளவில் வசூலையும் வாரிக்குவித்து உள்ளதால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.
இதையும் படியுங்கள்... 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! ரிலீஸ் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!
maamannan
மாமன்னன் தன்னுடைய கடைசி திரைப்படம் என்பதால் அதில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு சம்பளத்தை வாரி வழங்கி இருக்கிறார் உதயநிதி. அவரின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரித்திருந்தது. அதன்படி இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்த வடிவேலுவுக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. அதேபோல் வில்லனாக நடித்த பகத் பாசிலுக்கும் ரூ.2 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாம்.
Maamannan
இந்நிலையில், இப்படத்தை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜுக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி மாமன்னன் படத்தை இயக்க மாரி செல்வராஜுக்கு ரூ.5 கோடி சம்பளமாக வழங்கி உள்ளாராம் உதயநிதி. அவரது கெரியரிலேயே அவர் வாங்கிய அதிகபட்ச சம்பளம் இதுதானாம். இதையடுத்து படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் காரையும் பரிசளித்து மாரி செல்வராஜுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் உதயநிதி.
இதையும் படியுங்கள்... பிரபாஸின் 'சலார்' டீசர் ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!