இந்நிலைகள் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள பிரிகிடா, " தான் வேண்டும் என்று அவ்வாறு பேசவில்லை என்றும் இரண்டு எடுத்துக்காட்டுகளை சேர்த்து கூறியிருந்தால் அந்த வார்த்தை தவறாக தோன்றியிருக்காது. அரெஸ்ட் பிரகிடா என ட்விட்டரில் இரண்டாகும் ஹேஷ் டேக்கை பார்க்கும் பொழுது தனக்கு மிகுந்த மன வலி ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதோடு தனது முதல் அறிமுகப்படம் இது. சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் வருத்தமாக இருக்கிறேன் அப்படி பேசியதற்கு என் மீது தான் எனக்கு கோபம். என்னை ஜாதி வெறி பிடித்தவள் என விமர்சிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என கூறியுள்ளார். இரவின் நிழல் ஷ்லம் ஏரியாவில் எடுக்கப்பட்டுள்ளது படத்தில் நிறைய லொகேஷன்கள் வருகின்றன. லொகேஷன் முடியும் அதைத்தான் ரொம்ப ராவா இருக்கும் என்று சொல்லிவிட்டேன். சரியான விளக்கத்தை சொல்லாமல் விட்டது என்னுடைய தவறுதான். தப்பாக பேசி இருக்கக் கூடாது. தெரியாமல் பேசி விட்டேன். என்னை மன்னிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.