பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜவஹர் தொகுத்து வழங்கி வரும், காபி வித் கரண் நிகழ்ச்சியில்... இந்த வரம் நடிகை ஜான்வி கபூர் மற்றும் சாரா அலிகான் இருவரும் கலந்து கொண்ட நிலையில், இவர்களிடம் வெளிப்படையாக பல கேள்விகளை கேட்டுள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
மிகவும் கலகலப்பான இந்த நிகழ்ச்சியில்... பாலிவுட் வாரிசு நடிகைகளும், நெருங்கிய தோழிகளுமான சாரா அலி கானும், ஜான்வி கபூரும் சமீபத்தில கலந்துகொண்டுள்ளனர். இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாகப் பேசியுள்ளனர். இருவரும் ஒருமுறை இரண்டு சகோதரர்களுடன் டேட்டிங் செய்தது, முதல்கொண்டு பலவற்றை போட்டு வாங்கியுள்ளார் கரண்.
மேலும் செய்திகள்: இன்று 40-வது பிறந்தநாளை கொண்டாடும் பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
அந்த வகையில் ஜான்வி கபூரிடம். முன்னாள் காதலருடன் உடலுறவு கொள்வீர்களா என்று கரண் ஜோஹர் கேட்டதற்கு, பதில் அளித்த ஜான்வி "இல்லை,என்னால் பின்னோக்கிச் செல்ல முடியாது" என்றுபதிலளித்துள்ளார்.
সারা-জাহ্নবী
அதே போல் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் சாரா பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.