இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என கருதப்படும் நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு சுப்ரீம் சுந்தர் டான்ஸ் மாஸ்டராக ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...இந்நாளில் மறைந்த கவிஞர் வாலி... எழுத்துக்களால் சிகரம் படைத்தவரின் வெற்றி வரிகள் !
முக்கிய வேடங்களில் மஞ்சு வாரியர், வீரா,ஜான் கொக்கன் மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. தற்போது ஏகே 61 படத்தில் லேட்டஸ்ட் தகவலாக இதில் தெலுங்கு திரைப்படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வரும் நடிகர் அஜய் இணைந்துள்ளதாக தெரிகிறது. பான் இந்தியா மூவி என்பதால் மற்ற மொழி முன்னணி பிரபலங்களை அடுத்தடுத்து களமிறங்குகிறது படக்குழு.