Wedding photos: திருமணம் ஆன கையேடு படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த ஜெனிஃபர் லோபஸ்!

First Published | Jul 18, 2022, 4:46 PM IST

புகழ்பெற்ற ஹாலிவுட் பட நடிகையான ஜெனிபர் லோபஸ், தான் காதலித்து பிரேக் அப் செய்த நடிகைரை, 18 ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்து கொண்டுள்ளநிலையில்... திருமணமான கையேடு தன்னுடைய படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். 
 

ஹாலிவுட் திரையுலகை பொறுத்தவரை திருமணம் செய்து கொள்வதும், அந்த உறவு கசந்து விட்டால் மிக விரைவாக அதில் இருந்து வெளியேறி இரண்டாவது வாழ்க்கையை அமைத்து கொள்கிறார்கள். 

அந்த வகையில் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ், தற்போது 4-வது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார். 52 வயதிலும்... 20 வயது பெண்ணை போல் ஜொலிக்கும் ஜெனிபர் லோபஸ் 18 வருடங்களுக்கு முன் காதலித்து பிரேக் அப் செய்த நடிகரை தான் இப்போது கரம்பிடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: இன்று 40-வது பிறந்தநாளை கொண்டாடும் பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
 

Tap to resize

தன்னைவிட 3 வயது சிறியவரான நடிகர் பென் அஃப்லெக்கை கடந்த சனிக்கிழமை அன்று கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது திருமணமும் பிரமாண்டமாக நடந்துள்ளது.

நடிகர் பென் அஃப்லெக்கும், நடிகை ஜெனிபர் லோபஸும் கடந்த 2002-ம் கிக்லி என்கிற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்க துவங்கினர். 2 ஆண்டுகள் டேட்டிங் செய்த இவர்கள் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தங்களது காதலை முறித்து கொண்டனர்.

மேலும் செய்திகள்: போதை ஏறி போச்சா? பார் செட்டப்பில்... செருப்பை கழட்டி போட்டுவிட்டு சொக்கி போய் அமர்ந்திருக்கும் ரம்யா பாண்டியன்
 

இதையடுத்து நடிகர் ஜெனிபர் லோபஸ் நடிகர் ஒஜானி நோவா, டான்ஸர் கிரிஸ் ஜட் மற்றும் பாடகர் மார்க் ஆண்டனி என மூன்று பேரை திருமணம் செய்துகொண்டு... அவர்களிடம் இருந்து விவாகரத்தும் பெற்றார். மேலும் இவருக்கு மேக்ஸ் மற்றும் எம்மே என 14 வயதான இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.

அதேபோல் நடிகர் பென் அஃப்லெக்சும், ஏற்கனவே நடிகை ஜெனிபர் கார்னெர் என்பவரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்துவிட்டார். இத்தம்பதிக்கு ஒய்லெட், செரபினா, சாமுவேல் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இதை தொடர்ந்து 18 வருடத்திற்கு முன், காதலித்து பிரேக் அப் செய்த, நடிகை ஜெனிபர் லோபஸை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார் நடிகர் பென் அஃப்லெக் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் மகள் கேயா யார் தெரியுமா? அடேங்கப்பா இந்த துறையில் இவர் வல்லவராம்!
 

அதே போல், தற்போது இவர்கள் திருமண புகைப்படம், திருமணத்திற்கு முன்னதாக இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

திருமணமான கையேடு ஜெனிஃபர் லோபர்ஸ்... படுக்கையறையில் பெட் ஷீட் மட்டும் போற்றிக்கொண்டு படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட வேறு லெவலுக்கு பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!