manjummel boys
மலையாள திரையுலகில் இந்த ஆண்டு வெளிவந்த ஒரு மாஸ்டர் பீஸ் திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் இயக்கியிருந்த இப்படம் கொடைக்கானலில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. கொடைக்கானலுக்கு கேரளாவின் மஞ்சும்மல் பகுதியில் இருந்து சுற்றுலா வந்த இளைஞர்கள் குணா குகைக்கு சென்றபோது அங்கு, ஒருவர் எதிர்பாராத விதமாக அங்குள்ள பள்ளத்தில் விழுந்துவிடுகிறார். அவரை நண்பர்கள் சேர்ந்து மீட்ட உண்மைக் கதை தான் இந்த மஞ்சும்மல் பாய்ஸ்.
manjummel boys movie success
இது மலையாள படமாக இருந்தாலும், இதில் பெரும்பாலான இடங்களில் தமிழ் வசனங்களே இடம்பெற்றதால் இப்படத்தை தமிழ் நாட்டு மக்களும் கொண்டாடினர். கேரளாவுக்கு இணையாக தமிழ்நாட்டிலும் சக்கைப்போடு போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது. குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்கிற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்தது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது.
இதையும் படியுங்கள்... இவங்களுக்கு 50 வயசுனு சொன்னா யார் நம்புவா? அழகில் யங் லேடியாக ஜொலிக்கும் கவிதா விஜயகுமாரின் கலர்புல் கிளிக்ஸ்
Manjummel Boys box office record
அதேபோல் மலையாள திரையுலகில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய முதல் திரைப்படமும் மஞ்சும்மல் பாய்ஸ் தான். இப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு அதில் இடம்பெற்ற குணா பட பாடலும் ஒரு காரணம். நட்பை போற்றும் பாடலாக அப்பாடலைப் படத்தில் பயன்படுத்திய விதம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதோடு, தியேட்டரில் பார்க்கும் போது புல்லரிக்க வைத்தது. அதுவே அப்படத்தின் மிகப்பெரிய சக்சஸுக்கு காரணமாக அமைந்தது.
Ilaiyaraaja vs Manjummel Boys
அந்த பாடல் தான் நாளடைவில் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவுக்கு தலைவலியாகவும் மாறியது. குணா படத்துக்காக இளையராஜா இசையமைத்த் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை அவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதால் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவிடம் இழப்பீடு கோரி இசைஞானி வக்கீல் நோட்டோஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீஸ் கிடைத்ததும் மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளனர்.
Ilaiyaraaja won copyrights battle against Manjummel Boys
அப்போது இளையராஜா மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வெற்றியை கருத்தில் கொண்டு தனது பாடலை பயன்படுத்தியதற்காக ரூ.2 கோடி இழப்பீடு வழங்குமாறு கேட்டிருக்கிறார். அதன்பின்னர் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியாக ரூ.60 லட்சம் தருவதாக ஒப்பந்தம் செய்து அந்த தொகையை செலுத்திவிட்டு சட்ட சிக்கலில் சிக்காமல் தப்பித்து இருக்கிறார்கள். இதனால் கோர்ட் கேஸ் என அழையாமல் இந்த பிரச்சனை சுமூகமாக முடிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... De aging பண்ண சொன்னா.. Chai வாலாவை வச்சி டூப் போட்ருக்காங்கப்பா... விஜய்யின் யங் லுக்கை கலாய்த்த பிரபலம்