இட்லி கடை
கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை நடிகர் தனுஷ் இயக்கி உள்ளதோடு, இதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தந்தையின் பாரம்பரியமான இட்லிக் கடையைக் காப்பாற்றும் இளைஞனின் கதை தான் இந்த இட்லி கடை. இப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், சமுத்திரக்கனி, சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 29-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
தி விட்சர் சீசன் 4
ஹென்றி கேவிலுக்குப் பதிலாக லியாம் ஹெம்ஸ்வொர்த், ரிவியாவின் ஜெரால்ட்டாக நடிக்கும் இந்த சீசன், “பாப்டிஸம் ஆஃப் ஃபயர்” நாவலை அடிப்படையாகக் கொண்டது. ஜெரால்ட், சிரி, யென்னிஃபர் இடையேயான மோதல், மந்திர சக்திகள் மற்றும் அரசியல் இந்த சீசனின் முக்கிய அம்சமாகும். இந்த வெப் தொடர் அக்டோபர் 30ந் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
பேலட் ஆஃப் எ ஸ்மால் பிளேயர்
கொலின் ஃபாரெல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படம், மக்காவ் கேசினோக்களில் நடக்கும் ஒரு சூதாட்ட த்ரில்லர். ஒரு ஐரிஷ் மோசடிக்காரனின் வாழ்க்கையில் நடக்கும் மன மற்றும் ஆன்மீகப் போராட்டமே இதன் கதைக்களம். இதுவும் அக்டோபர் 29ந் தேதி முதல் நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.