Karthik Save His Mother in Law Chamundeshwari : தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக தனது அத்தையின் மானத்தை காப்பாற்ற கார்த்திக் ரூ.5 கோடிக்கு தனது இடத்தை விற்றுள்ளார்.
கார்த்திகை தீபம் 2 சீரியலில் தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பமாக இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களுக்கு வந்த 5 மடங்கு லாபத்தில் 20 சதவிகிதமான ரூ.5 கோடியை தனது செங்கல் சூளை மற்றும் புதிதாக தொடங்கிய பேக்டரி என்று தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கலாம் என்று கார்த்திக் ஐடியா கொடுத்தார்.
26
கார்த்திகை தீபம் 2 சீரியல்
அது நல்ல ஐடியா என்று சாமுண்டீஸ்வரி அப்படியே செய்யலாம் என்று வங்கிக்கு சென்று பணம் எடுக்க முயற்சித்தார். ஆனால், வங்கு உதவி மேலாளர் அப்படியெல்லாம் முடியாது. அதற்கு வங்கி மேலாளரின் கையொப்பம் தேவை. ஆதலால், அவர் இன்று லீவ் அவர் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றார். மேலும், அடுத்த நாள் வர சொல்ல சாமுண்டீஸ்வரியும் அதன்படி செய்தார்.
36
சாமுண்டீஸ்வரி
ஆனால், மேனேஜர் மட்டும் வரவில்லை. அவரது மொபைல் எண்ணும் சுவிட்ச் ஆஃப்பில் இருந்தது. இதற்கு காரணம் சிவனாண்டி மற்றும் முத்துவேல் தான். இருவரும் மேனேஜரை கடத்திச் சென்று தனது சித்தி மாரியம்மா வீட்டில் அடைத்து வைத்தனர்.
இதன் காரணமாக சாமுண்டீஸ்வரியால் ரூ.5 கோடி எடுக்க முடியவில்லை. பிறகு தனக்கு தெரிந்த தொழில் நண்பர்கள் மூலம் முயற்சித்த நிலையில் அதில் ஒரு சேட் ரூ.5 கோடி தருவதாக சொல்லவே சாமுண்டீஸ்வரி அங்கு சென்றார். ஆனால், அதற்குள்ளாக சிவனாண்டி அந்த சேட்டின் மகளை கடத்தி மிரட்டியதைத் தொடர்ந்து சேட் பணம் இல்லை என்று சொல்லிவிட்டார்.
இதனால் ஏமாற்றத்துடனும் மன வலியுடனும் வீட்டிற்கு சென்ற சாமுண்டீஸ்வரி தனக்காக காத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் என்ன சொல்வது தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் கார்த்திக் ரூ.5 கோடி பணத்துடன் வந்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸை கொடுத்து முடித்து அத்தையின் மானத்தை காப்பாற்றினார்.
மேலும் இந்தப் பணம் எப்படி வந்தது என்று விசாரிக்க, அவரோ தான் யாரிடம் எப்படி பணம் வாங்கினேன் என்பதை நிரூபிக்க போன் கால் செய்தார். கார்த்திக்கிற்கு பணம் கொடுத்தவரும் உங்களுடைய இடத்தை என்னுடைய பெயருக்கு மாற்றம் செய்வதாக சொல்லி ரூ.5 கோடியை வாங்கிக் கொண்டு போனீங்க என்றார். அதன் பிறகு உண்மையை தெரிந்த கொண்ட சாமுண்டீஸ்வரி மன நிம்மதி அடைந்தார்.
66
மாமியாரை காப்பாற்றிய கார்த்திக்
இது ஒரு புறம் இருந்தாலும் உண்மையை கண்டறிய கிராமத்து பெண் வேஷத்தில் பரமேஸ்வரியின் வீட்டிற்கு சென்ற தீபாவதி, அங்கு ஒரு வேலைக்கார பெண்ணாக நடிக்க தொடங்கினார். மேலும் கார்த்திக் யார், உண்மையில் பரமேஸ்வரி பாட்டியின் பேரனா என்பதை கண்டுபிடிக்க இப்போது மாறுவேடத்தில் வந்திருக்கிறார். ஆனால், அங்கு துர்கா மற்றும் நவீன் இருவரும் இருக்கும் சூழலில் எப்படி அவரால் கார்த்திக்கை பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்பது பற்றி இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.