எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இராமேஸ்வரத்தில் இருந்து மீண்டும் வந்துள்ள ஆதி குணசேகரன், தன் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார். இதனால் ஜனனிக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பழைய பகையை தீர்க்க இராமேஸ்வரம் சென்றிருந்த ஆதி குணசேகரன், மீண்டும் வீட்டுக்குள் வந்ததும் வீடே பரபரப்பாகிறது. எங்க போன என விசாலாட்சி கேட்க, சில நேரங்கள்ல தனிமை தான் வாழ்க்கையில் பல காயங்களுக்கு மருந்தாக இருக்கிறது. தனிமையில் இருக்கும்போது தான் நல்ல யோசனையும் வருது, தெளிவும் பிறக்குது என குணசேகரன் சொல்கிறார். அப்போது பேசும் கதிர், நீங்க வந்துட்டீங்கள்ல எல்லாரையும் விரட்டிவிட்றலாம் என சொல்ல, அதற்கு பதிலளிக்கு குணசேகரன், விரட்டி விடுறதெல்லாம் பெருசில்ல, இந்த வீட்டுக்கு எதிரா... குடும்பத்துக்கு எதிரா நடந்தா விளைவுகள் எவ்வளவு பயங்கரமா இருக்கும்னு எல்லாருக்கும் தெரிய வைக்கணும் என சொல்கிறார்.
24
எச்சரிக்கும் ஆதி குணசேகரன்
இராமேஸ்வரத்தில் இருந்து ரிட்டர்ன் ஆனதும் அவர் கோவிலில் பூஜை செய்து பிரசாதத்தை கொண்டு வந்திருப்பார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, தன்னுடைய பையில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து டேபிளில் ஆதி குணசேகரன் டேபிளில் வைக்க, அனைவரும் ஜெர்க் ஆகிறார்கள். இந்த வீடு எப்படி இருக்கனும், யார் பேச்சுக்கு யார் அடங்கனும், குணசேகரன் வீட்டு பொம்பளைனா எப்படி இருக்கனும்னு எல்லாத்துக்கும் சேர்த்து முடிவெடுக்க தான் நான் போனேன் என ஆதி குணசேகரன் சொன்னதும் அனைவரும் ஷாக் ஆகிறார்கள். பின்னர் மாடியில் உள்ள தன் ரூமுக்கு செல்கிறார் குணசேகரன்.
34
15 நாள் டைம்
மாடியில் ஜனனியும் சக்தியும் நின்று கொண்டிருக்க, அவரிடம் பேசும் ஆதி குணசேகரன், உனக்கு 15 நாள் டைம் தர்றேன். அதுக்குள்ள என் சம்பந்தப்பட்ட அம்புட்டையும் கொடுத்துட்டு திரும்பிப் பார்க்காம ஓடிப்போயிரு... இல்லேனா, உனக்கும் உன் புருஷனுக்கும் கருமாதி நடக்கும் என மிரட்டுகிறார் ஆதி குணசேகரன். ஜனனி பொய் சொல்லி தான் தன்னை பிளாக்மெயில் செய்கிறார் என்பது தெரியாமல் ஆதி குணசேகரன் சவால்விடுகிறார். இந்த நிலையில், சக்திக்கு அஸ்வினிடம் இருந்து போன் வருகிறது. அவர் தன்னிடம் இருக்கும் ஆதாரத்தை வந்து வாங்கிக் கொள்ளுமாறு அழைக்கிறார்.
அஸ்வின் சில தினங்களுக்கு முன்னர் புது வில்லனிடம் பணம் வாங்கிக் கொண்டு வீடியோ ஆதாரத்தை கொடுத்திருந்த நிலையில், அந்த கும்பல், அஸ்வினை துரத்தி வர, இதனால் பதறிப்போகும் அவர் சக்தியிடம் அந்த வீடியோவை கொடுக்க போன் போட்டு அழைக்கிறார். அஸ்வின் இருக்கும் இடத்தை சக்தியும் ஜனனியும் நெருங்கிய நிலையில், அந்த வீடியோவை அவர்கள் கையில் அஸ்வின் கொடுக்க சென்றபோது அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுகிறார்கள். இதனால் ஜனனி மற்றும் சக்தி இருவரும் ஷாக் ஆகிறார்கள். இதையடுத்து என்னென்ன ட்விஸ்டெல்லாம் காத்திருக்கிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.