Pandian Deliver Food in Gandhimathi 75th Birthday Function : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் முழுவதும் காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. இதுவரையில் சக்திவேல் மற்றும் கோமதியின் குடும்பமும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு மகன் மற்றும் மகள் இருவரும் ஆளாளுக்கு தங்க செயின் மற்றும் வளையல் என்று அம்மாவிற்கு பரிசு கொடுத்தனர்.
25
அம்மாச்சி, தாத்தா புகைப்படம்
இவர்கள் தவிர கதிர், தனது தாத்தா மற்றும் அம்மாச்சி இருவரும் இருவரும் இருக்கும் புகைப்படத்தையும், அம்மாச்சியோடு தனது அம்மா குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தையும் பரிசாக கொடுத்து அசத்தினார். இதனால், பிறந்தநாள் விழாவானது கொஞ்ச நேரம் ஆனந்த கடலில் மூழ்கியது. அதற்கு முன், ஆரம்பம் முதலே ஒவ்வொன்றையும் கதிர் தான் பார்த்து பார்த்து செய்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மீனாவின் அப்பா, அம்மாவை கூப்பிடுவது, தங்கமயிலின் அப்பாவிற்கு கார் அனுப்பி வைப்பது, பேனர் வைப்பது, மேள தாளம், போட்டோகிராஃபர், பாட்டி தாத்தாவின் போட்டோ ஃபிரேம் என்று ஒவ்வொன்றையும் கதிர் தான் செய்துள்ளார்.
இந்த நிலையில் தான் இப்போது அடுத்த கட்டமாக அன்னதானமும் நடக்க இருக்கிறது. இது தொடர்பான எபிசோடுகள் இந்த வாரம் அதாவது அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரையிலான எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் சக்திவேல் மற்றும் முத்துவேலின் குடும்பத்தினர் கறி விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். ஆரம்பத்திலேயே சமையல் மாஸ்டர் வர முடியாத சூழல் ஏற்பட அவருக்குப் பதிலாக வேறொரு மாஸ்டரை அவர்கள் அனுப்பி ஏற்பாடு செய்வதாக குமரவேலுவிற்கு வாக்குறுதி அளித்திருந்தனர்.
அப்படி அவர்கள் ஏற்பாடு செய்தது தான் இந்த புளியோதரை. இது தெரியாமல் சக்திவேல் குடும்பத்தினர் வாங்க எல்லோரும் கறி விருந்து சாப்பிடலாம் என்று கூப்பிட வந்தவர்கள் புளியோதரை சாப்பாட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு ஏமாற்றமும் விரக்தியும் அடைந்தனர். விருந்துக்கு வந்த எங்களை அசிங்கப்படுத்துரீங்களா என்று வந்தவர்கள் கேட்க ஆரம்பிக்க குமரவேலுவிற்கு கன்னத்தில் அறை விழுந்தது தான் மிச்சம். இதைத் தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து புறப்பட பாண்டியன் மகன் கதிர் யாரும் செல்ல வேண்டாம். எங்களது விருந்து சாப்பாட்டை சாப்பிடலாம் வாங்க என்று சொல்லி சாப்பிட வைத்தார்.
55
அன்னதானத்தில் கலந்து கொண்ட காந்திமதி
இதே போன்று தான் பாண்டியனும் தனது மாமியார் காந்திமதியை அழைத்து சாப்பிட வைத்தார். காந்திமதியும் மகள், பேத்தி என்று அனைவருக்கும் சாப்பாடு ஊட்டி விட்டார். மேலும் சக்திவேலுவின் உறவினர்கள் பாண்டியனை வெகுவாக பாராட்டினர். இப்படியான சூழலில் அடுத்த என்ன நடக்கும் என்பது தான் இந்த வாரத்திற்கான புரோமோ வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.