எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் சன் டிவியில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அடுத்த என்னென்ன எதிர்பாரா திருப்பங்கள் வரப்போகிறது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தர்ஷன் - பார்கவி திருமணத்துக்கு பின்னர் சற்று வேகம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் ஆதி குணசேகரனின் ஆப்சென்ட் தான். அவர் பழைய பகையை தீர்க்க சென்றிருப்பதாக கடந்த சில நாட்களாக சீரியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். இயக்குனரும் வீட்டுக்குள்ளேயே ஏதாவது குழப்பத்தை வர வைத்து சீரியலை ஓட்டிக் கொண்டிருக்கிறார். கடந்த வாரம் முழுக்க தலை தீபாவளி சீர் கொண்டு வருவதையே பல எபிசோடுகளாக இழுத்தடித்து இருந்தார். முதலில் விசாலாட்சிக்கு அவரின் அண்ணன் சீர் கொடுக்க, பின்னர் பார்கவிக்கு ஜீவானந்தம் சீர் கொடுக்க, இறுதியாக நந்தினி மற்றும் ரேணுகாவுக்கு சீர் கொடுக்க அவர்களின் அம்மா வர என இழுத்தடித்துவிட்டார்கள்.
25
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன?
ஆனால் இனி சீரியல் மீண்டும் சூடுபிடிக்க உள்ளது என்பது அன்புக்கரசியின் எண்ட்ரி மூலமே தெரியவந்துள்ளது. அவரை அறிவுக்கரசி பிளான் போட்டு அனுப்பி இருக்கிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. வந்த முதல் நாளே தர்ஷனிடம் அவன் தன்னுடன் பெட்ரூமில் ஒன்றாக இருந்த விஷயத்தை கூறி, தர்ஷனுக்கும் பார்கவிக்கும் இடையே சண்டையை மூட்டிவிடப் பார்த்திருக்கிறார். தர்ஷன் கல்யாணத்தின் போதே, இனி உன்னை நிம்மதியாகவே வாழ விடமாட்டேன் என சாபம் விட்டு சென்றிருந்த அன்புக்கரசி, தற்போது அதேபோல் செய்யத் தொடங்கி இருக்கிறார்.
35
சிக்கும் ஜனனி
ஜனனி தன்னிடம் ஆதி குணசேகரனுக்கு எதிரான வீடியோ ஆதாரம் அடங்கிய போன் இருப்பதை காட்டி தான் தர்ஷன் - பார்கவி திருமணத்தையே முடித்தார். ஆனால் அந்த போனில் எதுவும் இல்லை என்பது அவருக்கு மட்டுமே தெரியும். இருந்தாலும் அந்த வீடியோ ஆதாரங்கள் வைத்திருந்த கெவினின் நண்பன் அஸ்வினும், அதை புது வில்லனிடம் கொடுத்துவிட்டதால், என்ன செய்வதென்று தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் ஜனனி. ஆதி குணசேகரன் கொடுத்த ஒரு வாரம் டைம் முடிந்துவிட்டால், ஜனனி அவரிடம் வசமாக சிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. வீடியோ ஆதாரம் ஜனனியிடம் இல்லை என்பது மட்டும் ஆதி குணசேகரனுக்கு தெரிந்தால், அவரை வீட்டைவிட்டே துரத்தவும் வாய்ப்பு உள்ளது.
மறுபுறம் ஆதி குணசேகரன் பற்றிய வீடியோ ஆதாரங்களை அஸ்வினிடம் இருந்து வாங்கிச் சென்ற புது வில்லன் ஆதி, எந்தநேரத்திலும் உள்ளே எண்ட்ரி கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் எண்ட்ரி ஆனால் ஆதி குணசேகரனின் ஆட்டம் மொத்தமும் காலியாகிவிடும். அதுமட்டுமின்றி குணசேகரனைப் பற்றிய ரகசியங்களையும் ஆதி போட்டுடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதெல்லாம் நடந்தால் ஆதி குணசேகரன் ஜெயிலுக்கு செல்ல நேரிடும். இதனால் புது வில்லனின் எண்ட்ரி இனி வரும் வாரங்களில் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
55
அறிவுக்கரசி ரீ-ர்ண்ட்ரி
கெவின் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அறிவுக்கரசியை, ஜாமினில் எடுப்பதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. அநேகமாக கதிர் அவரை ஜாமினில் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அறிவுக்கரசி ஜாமினில் வெளியே வந்தால், அவர் தன்னை ஜெயிலுக்கு அனுப்பியவர்களை பழிவாங்கவும் வாய்ப்பு உள்ளது. அவர் குணசேகரனுடன் இனக்கமாக இருப்பதால், ஜனனி மற்றும் சக்தியை தீர்த்துக்கட்டவும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் தன் தங்கச்சியை ஏமாற்றிய தர்ஷனையும் போட்டுத்தள்ள வாய்ப்பு இருக்கிறது.