அருணின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணா போச்சு... கடவுள் போல் வந்து சீதாவை காப்பாற்றிய முத்து - சிறகடிக்க ஆசை

Published : Oct 25, 2025, 10:18 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவிடம் பணத்தை திருடிய ஆட்டோ டிரைவரை மடக்கிப் பிடித்து, அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாயை முத்து கைப்பற்றிய நிலையில், அடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் சீதா, மருத்துவமனை மேனேஜர் கொடுத்த 5 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு வங்கியில் டெபாசிட் செய்ய சென்றபோது அவரிடம் இருந்து வழிப்பறி செய்து திருடிச் சென்றனர். இதையடுத்து இந்த விஷயம் முத்துவுக்கு தெரியவர, அவர் அதிரடியாக களத்தில் இறங்கி, சீதா சென்ற ஆட்டோவின் ஓட்டுநர் தான் ஆள் வைத்து அந்த பணத்தை திருடி இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துவிடுகிறார். அதுமட்டுமின்றி அந்த ஆட்டோ டிரைவர் தன்னை போலீசில் மாட்டிவிட வேண்டாம் என முத்துவிடம் கெஞ்சி கேட்டார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
பணத்தை போலீசிடம் ஒப்படைத்த முத்து

சீதாவிடம் இருந்து பணத்தை திருடிய வழிப்பறி கும்பலை பிடித்து பணத்தை வாங்கியதாகவும், ஆனால் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறி போலீசிடம் அந்த 5 லட்ச ரூபாய் பணத்தை ஒப்படைக்கிறார் முத்து. இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்று, பணம் கிடைத்த விஷயத்தை சொல்லும் முத்து, சீதாவை கண்டபடி திட்டிய மேனேஜரிடம், எல்லார் முன்னாடியும் வச்சு அந்த பொண்ணு மேல திருட்டு பழியை போட்டிருக்கீங்க. இதனால் அவங்க சம்பாதிச்ச நல்ல பெயர் போயிருக்கும். நேர்மையாக இருப்பவர்கள் மேல தான் ஈஸியாக பழியை தூக்கி போட்டுவிடுகிறீர்கள் என கூறுகிறார்.

34
அருணுக்கு பல்பு கொடுத்த முத்து

இதையடுத்து சீதாவிடம் மன்னிப்பு கேட்கும் அந்த மேனேஜர், தான் பணம் பறிபோன டென்ஷனில் பேசிவிட்டதாக கூறுகிறார். மேலும் இனிமேல் நீ இங்கு தொடர்ந்து வேலை பார்க்கலாம் எனவும் சொல்கிறார். இதையடுத்து முத்து அங்கிருந்து கிளம்பி செல்கிறார். அப்போது அருகில் இருந்த அருண், இந்த விஷயத்தில் சீதாவை நம்ம எப்படியாவது காப்பாற்றிவிடலாம்னு பார்த்தால் கடைசி நேரத்தில் வந்து நல்ல பெயர் வாங்கிட்டு போயிட்டானே என மனதுக்குள்ளேயே குமுறும் அருண், தன்னுடைய ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிப் போன சோகத்தில் இருக்கிறார்.

44
உண்மையை உடைத்த ஆட்டோ டிரைவர்

பின்னர் ஒரு நாள் முத்து உடன் ஆட்டோ டிரைவர் பேசுவதை பார்த்த சீதா, தேவையில்லாம எதுக்கு இங்க நின்னு பேசிக்கிட்டு இருக்கீங்க என கேட்கிறார். அப்போது அந்த ஆட்டோ டிரைவர் அனைத்து உண்மையையும் சொல்கிறார். அன்னைக்கு உங்களிடம் இருந்து பணத்தை ஆள் வச்சு பிளான் பண்ணி திருடியது நான் தான். வேற யாராவது இருந்திருந்தா என்னை ஜெயிலுக்கு அனுப்பிருப்பாங்க. இந்த தம்பி தான் என் கஷ்டத்தை புரிந்துகொண்டு என்னை இந்த கேஸில் சிக்காமல் தப்ப வைத்தார் என சொல்கிறார். இதனால் சீதாவுக்கு முத்து மேல் இருந்த கோபம் குறைகிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories