அக்டோபர் மாதம் 31-ந் தேதி தமிழில் ஏராளமான புதுப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. தியேட்டரில் என்னென்ன திரைப்படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. அதன் பட்டியலை பார்க்கலாம்.
தீபாவளிக்கு ரிலீஸ் ஆன டியூட், பைசன் ஆகிய படங்கள் வெற்றிநடை போட்டு வருவதால், கடந்த வாரம் புதுப்படம் எதுவும் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில், வருகிற அக்டோபர் 31ந் தேதி தியேட்டரில் போட்டிபோட்டு புதுப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
25
ஆர்யன்
விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள 'ஆர்யன்‘ திரைப்படம் வரும் அக்டோபர் 31ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி இருக்கும் இப்படத்தை பிரவீன் கே இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இப்படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் விஷ்ணு விஷால். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் செல்வராகவனும் நடித்திருக்கிறார்.
35
ஆண் பாவம் பொல்லாதது
கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் நடிக்கும் ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் வருகிற அக்டோபர் 31ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஜோ படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மனோஜ் தான் இப்படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்து உள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு வருண் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
சூப்பர் சிங்கர் பிரபலம் கப்பீஸ் பூவையார் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ராம் அப்துல்லா ஆண்டனி. இப்படத்தை ஜெயவேல் இயக்கி உள்ளார். இப்படத்தில் செளந்தரராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமும் அக்டோபர் 31ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு கிருஷ்ணா சேட்டன் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக எல்.கே.விஜய்யும், படத்தொகுப்பாளராக வினோத் சிவகுமாரும் பணியாற்றி உள்ளனர்.
55
பாகுபலி தி எபிக்
பான் இந்தியா படங்கள் தற்போது அதிகளவில் வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட படம் தான் பாகுபலி. ராஜமெளலி இயக்கிய இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆனது. அவை இரண்டுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. பிரபாஸ், அனுஷ்கா, ராணா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம், தற்போது ஒரே பாகமாக பாகுபலி தி எபிக் என்கிற பெயரில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. அக்டோபர் 31ந் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.