தனுஷின் 'இட்லி கடை' படத்தில் நடிக்க 3 மடங்கு அதிக சம்பளம் வாங்கிய அருண் விஜய் - இத்தனை கோடியா?

First Published | Dec 3, 2024, 7:21 PM IST

தனுஷ் இயக்கி நடித்து வரும் 4-ஆவது படமான 'இட்லி கடை' படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்க, அருண் விஜய் ஹீரோவாக நடிப்பதற்கு வாங்கும் சம்பளத்தை விட, மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
 

Actor Dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தன்னுடைய பன்முக திறமையால் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருபவர்.  ஒரு நடிகராக தன்னுடைய கெரியரை துவங்கி, பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான தனுஷ், தன்னை ஒரு ஹீரோவாக தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக்கொண்ட பின்னர், பாடகர், பாடலாசிரியர்,  இயக்குனர், தயாரிப்பாளர், என தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி கண்டார்.

Dhanush Raayan

இவர் கடைசியாக தன்னுடைய ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தை இயக்கி அதில் நடித்திருந்தார். சுமார் 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரூ.170 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த படத்தில் இதுவரை பார்த்திடாத தனுஷின் புதுமையான தோற்றத்தையும், நடிப்பையும் ரசிகர்களால் பார்க்க முடிந்தது. ஏற்கனவே பா பாண்டி படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திக் கொண்ட தனுஷ், ராயன் படத்திலும் தன்னுடைய சிறப்பான இயக்கம் மற்றும் கதைகளத்தால் ரசிகர்களை குஷியாக்கினார்.

மணிரத்னம் முதல் அமீர் கான் வரை! நாக சைதன்யா - சோபிதா திருமணத்திற்கு வருகை தரும் பிரபலங்கள் லிஸ்ட் இதோ!

Tap to resize

nilavuku en mel ennadi kobam

இதைத்தொடர்ந்து தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக வைத்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார்.  டீன் ஏஜ் பருவ ஆண்கள் - பெண்களுக்கும் நடக்கும் காதல், வெறுப்பு, சண்டை, என அனைவரையும் கவரும்படியான ஒரு கதைக்களத்தில் தான் இந்த படம் உருவாகியுள்ளது. கூடிய விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ள நிலையில், இந்தப்படத்தை தொடர்ந்து 'இட்லி கடை' என்கிற படத்தையும் எடுத்து முடித்துள்ளார். இந்த படத்தை தவான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Actress Nithya Menen

'இட்லி கடை' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தேசிய விருது நாயகி நித்யா மேனன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக ஷாலினி பாண்டே நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்! டோலிவுட்டில் முதல் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய இந்த நடிகை யார் தெரியுமா?
 

Arun Vijay Salary in Idly Kadai

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்துள்ள அருண் விஜயின் சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது. 'என்னை அறிந்தால்' படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து கவனிக்க வைத்த அருண் விஜய் இதை தொடர்ந்து, ஹீரோ சப்ஜெட் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்தார். ஆனால் இட்லி கடை படம் ஹீரோவுக்கு நிகரான வில்லன் ரோல் என்பதால் இந்த பாடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், மேலும் ஹீரோவாக நடிக்க ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கும் அருண் விஜய், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ரூ.8 முதல் 10 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 
 

Latest Videos

click me!