ஐதராபாத்தை சேர்ந்தவர் அர்மான் மாலிக். இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தனது லைஃப் ஸ்டைல் பற்றிய கண்டெண்ட்டுகளை தினசரி பதிவிட்டு வரும் அர்மான் மாலிக்கிற்கு யூடியூபில் 20 லட்சத்திற்கும் அதிகமான சர்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இதனால் அவர் யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார்.
இரண்டு மனைவிகளுடனும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வரும் அர்மான் மாலிக்கின், சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு தான் அனைவரையும் ஷாக் ஆக்கி உள்ளது. அதில் அவர் தனது இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமான தகவலை வெளியிட்டுள்ளதோடு, அவர்களுடன் போட்டோஷூட்டும் நடத்தி அதனை பதிவிட்டுள்ளார்.
இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமான சந்தோஷத்தில் அர்மான் மாலிக் இருந்தாலும், அவரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தும் வருகின்றனர். கர்ப்பமாக இருக்கும் இரு மனைவிகளுக்கு முத்தமிட்டவாரு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அர்மான் மாலிக். அந்த புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங்கில் உள்ளது.
இதையும் படியுங்கள்... Vijay Photos: 'வாரிசு' லுக்கில் திருமணத்தில் கலந்து கொண்ட விஜய்..! வைரலாகும் புகைப்படம்..!