வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக தயாராக உள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார். இதுதவிர இப்படத்தில் ஏராளமான வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனால் விஷால் இப்படத்தில் நடிப்பது உறுதி தான் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது விஷாலே அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். நடிகர் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளின் போது தளபதி 67 படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
அதன்படி லத்தி பட ரிலீசுக்கு பின்னர் தான் மார்க் ஆண்டனி படம், துப்பறிவாளன் 2 ஷூட்டிங் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஒரு படம் என அடுத்த ஆண்டு முழுவதும் பிசியாக இருப்பதால் தளபதி 67 படத்திற்காக என்னால் தேதி ஒதுக்க முடியவில்லை. லோகேஷ் என்னை அணுகியபோதும் அவரிடம் இதைத்தான் சொன்னேன். இருப்பினும் எதிர்காலத்தில் விஜய்யை சந்தித்து அவருக்கு கதை சொல்லி, அவரை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார் விஷால்.
இதையும் படியுங்கள்... 'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகா இடத்தை தட்டி தூக்கிய கங்கனா ரணாவத்! வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!