Suriya : ஸ்காட்லாந்தில் பிரம்மாண்ட கோட்டையில் நடந்த சூர்யா - ஜோதிகா திருமணம் - அதற்கு செலவானது எவ்வளவு தெரியுமா?

Published : Sep 19, 2026, 10:40 AM IST

Suriya Jyothika Wedding : நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் சமீபத்தில் ஸ்காட்லாந்தில் தங்கள் 20வது திருமண நாளை கொண்டாடி இருந்தனர். அந்த திருமணத்திற்காக அவர்கள் செய்த செலவு பற்றி பார்க்கலாம்.

PREV
14
Suriya Jyothika 20th Anniversary

நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளில் முக்கியமானவர்களாக வலம் வருகின்றனர். இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தங்களது திருமண நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர். இந்த சிறப்பு தருணத்திற்காக சூர்யா - ஜோதிகா தேர்வு செய்த இடம்தான் தற்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள பிளேர்குஹான் கேஸ்டில் (Blairquhan Castle) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் அவர்கள் 20-வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடியுள்ளனர்.

Suriya Jyotika Record : விஜய் - அஜித் நட்பின் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய சூர்யா - ஜோதிகாவின் காதல்...!

24
எங்கே அமைந்துள்ளது இந்த கோட்டை?

பிளேர்குஹான் கேஸ்டில், ஸ்காட்லாந்தின் ஐஷைர் பகுதியில் உள்ள மேபோலே நகருக்கு அருகே அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான எஸ்டேட்டுக்குள் இந்த பிரம்மாண்ட கோட்டை அமைந்துள்ளது. திருமணங்கள் உள்ளிட்ட பிரமாண்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இந்த இடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோட்டையின் பிரதான கட்டிடத்தில் 15 படுக்கையறைகள் உள்ளன. இதுதவிர, விருந்தினர்கள் தங்குவதற்காக தனித்தனி குடில்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

34
திருமணம் நடத்த இவ்வளவு செலவாகுமா?

சூர்யா - ஜோதிகாவின் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியான பிறகு, இந்தக் கோட்டையில் திருமணம் அல்லது பிரத்யேக நிகழ்ச்சி நடத்துவதற்கான செலவு குறித்து இணையத்தில் பலரும் தேடி வருகின்றனர். கோட்டையின் தகவலின்படி, விருந்தினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு திருமண பேக்கேஜ்கள் வழங்கப்படுகின்றன.

60 விருந்தினர்களுக்கான பேக்கேஜ் சுமார் 21,350 பவுண்டுகள் எனவும், இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.27.4 லட்சம் எனவும் கூறப்படுகிறது. அதேபோல், 80 பேர் பங்கேற்கும் பேக்கேஜின் கட்டணம் 24,350 பவுண்டுகள், அதாவது சுமார் ரூ.31.2 லட்சம் வரை இருக்கும். இந்த பேக்கேஜ்களில் கோட்டையை பிரத்யேகமாக பயன்படுத்துவதற்கான கட்டணம் மற்றும் உணவு உள்ளிட்ட சில ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களுடன் நிகழ்ச்சியை நடத்த விரும்புபவர்களுக்கும் தனி திட்டங்கள் உள்ளன. 30 பேருக்கான பேக்கேஜ் 20,560 பவுண்டுகள் எனவும், 50 பேருக்கான பேக்கேஜ் 23,560 பவுண்டுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இவை முறையே சுமார் ரூ.26.4 லட்சம் மற்றும் ரூ.30.2 லட்சம்.

44
விருந்தினர்களுக்கான உணவு ஏற்பாடுகள்

பிளேர்குஹான் கேஸ்டிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கான உணவு ஏற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. பருவத்துக்கு ஏற்ற புதிய பொருட்களை பயன்படுத்தி மெனுக்களை தயாரிக்கும் கேட்டரிங் நிறுவனங்களுடன் கோட்டை நிர்வாகம் இணைந்து செயல்படுகிறது. விருந்தினர்களின் உணவு விருப்பங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மெனுவை மாற்றியமைக்கும் வசதியும் இருப்பதாக கூறப்படுகிறது.

திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்லாமல், தனிப்பட்ட விழாக்கள், பார்ட்டிகள் மற்றும் கார்ப்பரேட் நிகழ்ச்சிகளையும் நடத்தும் வகையில் இந்த எஸ்டேட் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் பழமையான கோட்டையின் 15 அறைகளும் தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் அலங்காரத்துடன் காணப்படுகின்றன. பாரம்பரிய தோற்றத்துடன் நவீன வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், கோட்டை வளாகத்தில் தங்க விரும்புபவர்களுக்காக தனித்தனி குடில்களும் உள்ளன. இவற்றில் ஒரு குடிலுக்கான முன்பதிவு கட்டணம் 534 பவுண்டுகளில் இருந்து தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.68 ஆயிரம்.

பசுமையான காடுகள், திறந்தவெளிப் பகுதிகள், மலைப்பாங்கான இயற்கை சூழல் என ஸ்காட்லாந்தின் அழகிய பின்னணியில் அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில்தான் சூர்யா - ஜோதிகாவின் 20 ஆண்டு திருமண கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.

Suriya Jyotika : மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories